புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான மூன்று நாள் விவா­தத்தின் இறுதி நாள் இன்­றாகும். 

இறுதி நாளான இன்றைய தினத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்­சித் ­த­லைவர் இரா.சம்­பந்தன், மக்கள் விடு­ தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொறடா­வு­மான அநு­ர­கு­மார திஸா­ந­ாயக்க எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லா­ளர் ­நா­யகம் டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி., தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் அமைச்சர் மனோ ­க­ணேசன் ஆகி யோர் முக்­கிய உரை­களை ஆற்­ற­வுள்­ளனர். 

இதே­வேளை கூட்டு எதிர்க்­கட்­சியின் சார்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ எம்.பி.யும் உரை­யாற்­று­வா­ரென கூட்டு எதிரணி வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. 

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான விவாதம் நேற்று  முன்­தினம் திங்­கட்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் விமல் வீர­வன்ஸ எம்.பி. தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி தவிர்ந்த ஏனைய பாரா­ளு­மன்ற அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்டு பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். 

குறிப்­பாக பிர­தி­நி­தி­களின் கருத்­துக்கள் மற்றும் தனிப்­பட்ட நிலைப்­பா­டுகள் ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்தி கட்­சி­களின் தலை­வர்கள் தமது உரை­களை ஆற்­ற­வுள்­ள­தோடு இடைக்­கால அறிக்­கையை அடுத்த கட்­டத்­திற்கு எடுத்து செல்வது குறித்தும் உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையிலான கருத் துக்களை வெளிப்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.