முன்னாள் ஜனா­தி­ப­தி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜ­பக்­ஷ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் ஆஜராகியுள்ளார்.

வாக்­கு­மூலமொன்றை பதிவு செய்­வ­தற்­காக ஷிரந்தி ராஜ­பக்ஷவை ஆணைக்­கு­ழுவில் ஆஜ­ரா­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டிருந்த நிலையிலேயே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார்.

கடந்த அர­சாங்­கத்தின் போது ஊடக ஆலோ­ச­க­ராக செயற்­பட்ட ஒரு­வ­ருக்கு குறைந்த மதிப்­பீட்டில் வீடொன்று பெற்றுக் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாடு குறித்தே ஷிரந்தி ராஜ­பக்­ ஷவிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

கஹ­து­டுவ பிர­தே­சத்­தி­லுள்ள குறித்த வீடு 5 இலட்சம் என குறிப்­பி­டப்­பட்­டுள்ள போதிலும் அந்த வீட்டின் உண்மை பெறுமதி 55 இலட்சம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.