அத்தனகலு ஓயா, துனாமலையில் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சில மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பெய்து வரும் அடைமழையையடுத்து, அத்தனகலு ஓயாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால், துனாமலை தாழ் நிலப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்பாக இருக்குமாறும், பாதுகாப்பான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.