மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சாதாரணதர மாணவர்களுக்கான கையேடு  : நவம்பர் 5 இல் வெளியீட்டு நிகழ்வு

Published By: Digital Desk 1

29 Oct, 2026 | 01:47 PM
image

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக்கொண்டு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தயாரிப்பில் உருவான  தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய கையேட்டின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05) தலைமை காரியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக மன்றம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில், தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் விசேட கல்விச் செயற்றிட்டத்தின்  முன்னெடுப்பில் இம்முறை 20,000 கையேடுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக மன்றத்தின் பரீட்சைகள் மற்றும் கருத்தரங்குப் பொறுப்பாளர் பாலா சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் பரீட்சைகளின்  அடைவுமட்டத்தையும் மேம்படுத்தும் நோக்கில், மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் பல்கோண செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அதன் வரிசையில் வருடந்தோறும் தரம் 11 மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகளை இலக்காகக் கொண்டு மாதிரி வினாத்தாள்கள் தயாரித்து வழங்கி வருகிறது.

வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், இம்முறையும்  பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் சிறந்த முறையில் தயாராகும் வகையில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான 20,000க்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தகுதிவாய்ந்த மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வினாத்தாள்கள், மாணவர்களின் பாட அறிவை மதிப்பிடுவதற்கும், பரீட்சை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கும், நேர முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும், மாணவர்கள் பரீட்சைக்கு முன்னதாகத் தமது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்து, தங்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படும் பாடப்பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் இம்மாதிரி வினாத்தாள்கள் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழமையான நடைமுறைகளுக்கு அமைய இவ்வினாத்தாள்கள் உரிய பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் உரிய நேரத்தில் கையேடுகள் கிடைக்கப்பெறும் அதேவேளை பின்னர் குறித்த பாடசாலைகளில் கருத்தரங்குகள் இடம்பெறும்.

மலையக மாணவர்களின் எதிர்காலம் கருதிய ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்களை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் நன்றியோடு நினைவுகூர்வதுடன் பரீட்சைக்குத் தோற்றும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு  
0777305450, 0774497234, 0779569355

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48