மீன்பிடித்துறை முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யவுள்ளதாக, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.

நீர்கொழும்புப் பகுதியில் நீர்ப்பரப்பொன்றை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 11.5 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவே மேற்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

இக்குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்த விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது.