Softlogic இன் Future Automobiles தேசிய உயிரியல் பூங்காக்களுக்கு வாகனங்களை வழங்கியுள்ள Ford Ranger

Published By: Priyatharshan

31 Oct, 2017 | 04:33 PM
image

சர்வதேச அளவில் பாரியதொரு மோட்டார் வாகனமாகத் திகழ்ந்து வருகின்ற Ford Motor Company இனை Future Automobiles (Pvt) Limited நிறுவனம் இலங்கையில் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றது. Softlogic Holdings PLC நிறுவனத்தின் துணை நிறுவனமாகத் தொழிற்பட்டு வருகின்ற அந்நிறுவனம் தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்திற்கு மூன்று Ford Ranger பிக்-அப் வாகனங்களை அண்மையில் வழங்கியுள்ளது.

திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த மூன்று Ford Ranger single cab பிக்-அப் டிரக் வாகனங்களும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ரிதியகம உயிரியல் பூங்காவில் உபயோகிக்கப்படவுள்ளன. 500 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பூங்கா வலயத்தில் உள்ள கரடுமுரடான நிலப்பகுதியில் பணியாளர்கள், விநியோகங்கள் மற்றும் காட்டு விலங்குகளின் போக்குவரத்துத் தேவைகளுக்கு அவை உபயோகிக்கப்படவுள்ளன.

Duratorq TDCi 2.2L மற்றும் 3.2L VG Turbo டீசல் இயந்திரங்களைக் கொண்டுள்ள Ford Ranger வாகனங்கள். புதிய 6-speed transmission தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அவை மிகச் சிறந்த வகையில் சுமைகளைக் கொண்டு செல்லக்கூடிய திறனையும், 3500 கிலோ எடைக்கும் அதிகமானவற்றை கட்டி இழுத்துச் செல்லும் திறனையும் கொண்டவை. அதன் அடிப்பாகமானது தரைமட்டத்திலிருந்து அதிக அளவான உயரம் கொண்டதாக அமைந்துள்ளதுடன், 800 மில்லிமீற்றர் தண்ணீரை ஊடுருவிச் செல்லும் திறனையும் கொண்ட Ranger இன் மிகச் சிறந்த முன்னிலைத் தொழில்நுட்பங்கள் கரடுமுரடான நிலப்பரப்பில் அதன் சிறந்த தொழிற்பாட்டை மேம்படுத்துகின்றன. “Built Ford Tough” என்ற மகுட வாக்கியத்திற்கு அமைவாக, பாறையைப் போல கடினமான கீழ்ப்பாகமானது புதிய Ranger வாகனங்கள் நீடித்து உழைப்பதற்கும் அதிக பாரமான அடித்தளத்தைக் கொண்டிருப்பதற்கும் வழிகோலியுள்ளது.

இலங்கையில் 5-star ANCAP பாதுகாப்பு தரப்படுத்தலைப் பெற்றுள்ள ஒரேயொரு பிக்-அப் டிரக் வாகனமாக Ford Ranger திகழ்ந்து வருகின்றது. ANCAP (அவுஸ்திரேலிய புதிய கார் தொடர்பான மதிப்பீட்டுத் திட்டம்) ஆனது அவுஸ்திரேலியாவில் முன்னிலை வகிக்கின்ற சுயாதீன வாகன பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமாகச் செயற்பட்டு வருவதுடன் 1993 ஆம் ஆண்டு முதலாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற 590 இற்கும் மேற்பட்ட பிரயாணிகள் மற்றும் இலகு ரக வர்த்தகப் பாவனை வாகனங்களுக்கான விபத்து மதிப்பீட்டுச் சோதனைப் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.

1 முதல் 5 நட்சத்திர புள்ளி அளவீட்டுத் திட்டத்தை உபயோகித்து, ANCAP பாதுகாப்பு தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டு வருவதுடன், விபத்தின் போது அதில் பிரயாணம் செய்பவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு அந்த வாகனம் வழங்கும் பாதுகாப்பு மட்டத்தை குறிக்கும் வகையிலும், மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விபத்து நேருவதைத் தவிர்க்கும் ஆற்றலும் இந்த நட்சத்திர தரப்படுத்தல் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விபத்து தொடர்பான பல்வேறு தொடர் சுயாதீன சோதனைகள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தரப்படுத்தல் தீர்மானிக்கப்படுகின்றது. வலுத்தப்படுத்தப்பட்ட கூடத்துடன் சேர்ந்து பக்கவாட்டு மற்றும் திரைச்சீலை airbags உட்பட airbags, வெளியில் போதுமான வெளிச்சம் இல்லாத சமயத்தில் சுயமாக ஒளிரும் முகப்பு விளக்குகள், குடைசாயும் ஆபத்தைக் குறைப்பதற்கு Roll-over Mitigation, செங்குத்தான சாய்வுகளில் மேலே செல்வதற்கு வலுவை அதிகரிக்க உதவும் Hill Launch Assist,  செங்குத்தான சாய்வுகளில் கீழே வரும் போது உதவுவதற்கு Hill Descent Control, அவசரமாக வாகனத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலைகளில் தடுத்து நிறுத்துவதற்கு அதிகபட்ச அமுக்கத்தை வழங்கும் Emergency Brake Assist> Load Adaptive Control மற்றும் Traction Control ஆகிய இந்த வாகனத்தின் பாதுகாப்பு சார்ந்த மிக முக்கியமான தொழில்நுட்ப சிறப்பம்சங்களில் சிலவாகும்.

Future Automobiles நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து Ford Ranger பிக்-அப் டிரக் வாகனங்களுக்கும் 100,000 கிலோ மீட்டர் அல்லது 5-வருட இயந்திர (Power Train)உத்தரவாதம் கிடைக்கப்பெறுகின்றது. அதி நவீன உபகரணங்கள், குழசன இன் நீட்டிக்கப்பட்ட பேணற்சேவைத் திட்டங்கள், அசல் Ford உதிரிப்பாகங்கள் மற்றும் உயர் பயிற்சி பெற்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் என குழசன நிறுவனத்தின் சர்வதேச தர நடைமுறைகளுக்கு அமைவாக இலங்கையில் ஒட்டுமொத்த சேவை அனுபவத்தையும் கொழும்பிலுள்ள அதி நவீன Ford 3S முகவராண்மை வசதி உறுதி செய்கின்றது. 

மேலும், அனைத்து 9 மாகாணங்களிலுமுள்ள 12 பேணற்சேவை முகவராண்மை வலையமைப்பு மற்றும் அங்கு கடமையாற்றும் விசேட பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்கள் Ford Ranger தொடர்பான அனைத்து தேவைப்பாடுகளையும் Ford வாடிக்கையாளர்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கின்றனர்.

Future Automobiles நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சமத் தென்னக்கோன், Ford Ranger வாகனங்கள் தொடர்பில் விளக்கும் போது, “வலுவான ஆற்றல், தரமான கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றின் இணைப்பின் மூலமாக இப்பிரிவில் புதிய தர ஒப்பீட்டு நியமத்தை Ford Ranger ஏற்படுத்தியுள்ளது. ‘‘Built Ford Tough’ என்ற மகுட வாக்கியத்திற்கு அமைவாக பொறியமைப்புச் செய்யப்பட்ட Ford Ranger, சந்தையிலுள்ள வலுவான பிக்-அப் வாகனங்களில் ஒன்றாகத் திகழ்வதுடன் அதிசிறந்த குதிரை வலு மற்றும் வலுவான torque churned-out, எரிபொருள் திறன் கொண்ட Ford டீசல் இயந்திரங்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, சாரதிகள் பாதுகாப்பாகவும் இணைப்பிலும் மற்றும் தமது கட்டுப்பாட்டில் பேணவும் உதவும் வகையில் புதிய Ford Ranger வாகனத்தில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் கிடைக்கப்பெறுகின்றன. இத்தகைய மரபுச் சிறப்பிற்கு மத்தியில் Ford Rangerவாகனத்திற்கு ஏராளமான சர்வதேச விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை ஆச்சரியத்தக்க ஒரு விடயமல்ல. மிகவும் சமீபத்தில் ‘Middle East Car of the Year 2017 Awards’ விருதுகள் நிகழ்வில் ‘Best Midsize Truck’ என்ற விருதை அது வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ford Ranger வாகனங்களின் அண்மைக்கால விற்பனைப் போக்கு தொடர்பில் Future Automobiles நிறுவனத்தின் விற்பனைத் துறை பணிப்பாளரான கிஹான் விதாரண விளக்கும் போது,

 “உலகத்தரம் வாய்ந்த இந்த பிக்-அப் டிரக் வாகனங்களை உபயோகிப்பதன் மூலமாகக் கிடைக்கப்பெறும் கணிசமான நன்மைகளை விளங்கிக் கொண்டு பல்வேறு அரச துறை நிறுவனங்கள் Ford Ranger வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானித்துள்ளமையை நாம் அவதானித்துள்ளோம். Ford Ranger வாகனங்கள் கவனமாக உபயோகிக்கப்பட்டு, எமது முகவர் வலையமைப்பின் மூலமாக முறையாக பேணற்சேவைக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் 10-12 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தக்கூடியவையாக உள்ளதுடன், முதலீட்டிற்கு அது வழங்கும் மிகச் சிறந்த பிரதிலாபத்தையும் அவர்கள் இனங்கண்டுள்ளனர்,” என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகம், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வாணிப அமைச்சு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை வங்கி போன்ற அரச நிறுவனங்கள் அண்மைக்காலங்களில் Ford Ranger வாகனங்களைக் கொள்வனவு செய்துள்ள அரச நிறுவனங்களில் சிலவாகும் என அவர் தொடர்ந்தும் கூறினார்.

இலங்கையிலும் Ford வாகனங்களின் பாரம்பரியம் உள்நாட்டு மோட்டார் வாகனத் தொழிற்துறைக்கு ஈடாக செழுமை மிக்கது. 2010 ஆம் ஆண்டில் Ford நிறுவனம் சந்தையில் காலடியெடுத்து வைத்திருந்த நிலையில், பாதுகாப்பு, புத்தாக்கம், எரிபொருள் வினைத்திறன் மற்றும் தொழிற்பாட்டுத்திறன் ஆகிய அம்சங்களில் Ford கார்கள் உயர்ந்த தர நடைமுறைகளைக் கொண்டிருப்பதை இலங்கை வாடிக்கையாளர்கள் விரைவாக இனங்கண்டுள்ளனர். இலங்கையிலுள்ள Ford காட்சியறையில் Ranger பிக்-அப் டிரக் வாகனங்களுக்குப் புறம்பாக, பிரயாணிகள் பயன்பாட்டு காரான Fiesta மற்றும் Kuga, EcoSport மற்றும் Everest ஆகிய SUV வாகனங்களும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

50 ஆண்டுகளை நிறைவு செய்யும் எய்ட்கன்...

2024-09-09 10:20:01
news-image

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும்...

2024-09-09 09:30:01
news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54
news-image

இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC)...

2024-09-06 09:46:27
news-image

குழந்தைப் பருவ விருத்தியில் பெரும் மாற்றத்திற்காக...

2024-08-29 19:34:33
news-image

கூட்டுறவு மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச்...

2024-08-27 14:20:30
news-image

அமானா வங்கி மற்றும் Prime குரூப்...

2024-08-26 15:21:48
news-image

2024\25இன் முதலாவது காலாண்டில் வலுவான செயற்றிறனைக்...

2024-08-20 21:41:17
news-image

இலங்கையின் முதலாவது நவீன இல்லத் தொடர்மனை...

2024-08-20 15:28:49
news-image

தேயிலை ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னணி வகிக்கும்...

2024-08-26 14:41:55
news-image

இலங்கையின் போக்குவரத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க Plug-in...

2024-08-15 15:16:18
news-image

2024 தேசிய வணிக விசேடத்துவ விருது...

2024-08-15 14:31:40