இது கரப்பான் பூச்சி ஃப்ரை ; சீனாவில் விற்கப்படும் விசேட தின்பண்டங்கள்!

28 Oct, 2026 | 03:53 PM
image

சீனாவில் உள்ள உணவகம் ஒன்று கரப்பான் பூச்சி வகையைச் சேர்ந்த பூச்சிகளை எண்ணெயில் வறுத்து, அவற்றை முட்டை மற்றும் இனிப்புப் பண்டங்களுடன் சேர்த்து விற்பனை செய்து வருவது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தெற்கு சீனாவில் உள்ள ஷூண்டே நகரில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்று, 'வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ்' (Water Roach Egg Tarts) என்ற பெயரில் புதிய தின்பண்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த உணவில் ஒரு முழு வறுத்த பூச்சியானது இனிப்பு மற்றும் கார சுவைகளுடன் பரிமாறப்படுகிறது.

மருத்துவக் குணங்கள் உள்ளதா?

சீனாவின் பாரம்பரிய கலாசாரம் மற்றும் மருத்துவ முறைப்படி, இந்த வகை வண்டுகள் உள்ளூர் சிறப்பு உணவாகக் கருதப்படுகின்றன. இவை சருமம் மற்றும் சிறுநீரகத்திற்கு ஊட்டமளிப்பதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்தக் கட்டுகளை நீக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது. 

மேலும், தசை மற்றும் எலும்புகளை வலுப்படுத்தக்கூடிய மருத்துவக் குணங்கள் அவற்றுக்கு இருப்பதாகக் கூறப்பட்டு இப்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இணையவாசிகளின் கலவையான விமர்சனங்கள்

இந்த வினோத உணவு தொடர்பான தகவல்களும் படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

"இதைச் சாப்பிடுவது ஒருபுறம் இருக்கட்டும், இதைப் பார்ப்பதையே தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றுமொருவர், "நான் இதை சுவைத்ததில்லை, ஆனால் சீன மருத்துவ சிகிச்சைகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் வண்டுகள் பயன்படுத்தப்படுவது உண்மைதான்" எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குப்புறக் கிடந்த ஆமையை நிமிர்த்தி உதவி...

2026-11-04 15:23:36
news-image

90 வயது ஆணழகன்! ; நம்பிக்கை...

2026-11-02 15:05:23
news-image

இது கரப்பான் பூச்சி ஃப்ரை ;...

2026-10-28 15:53:42
news-image

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ‘தலுக்கு புலுக்கு தக்காளி’...

2026-10-25 17:22:32
news-image

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல்...

2026-10-17 16:47:42
news-image

10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடந்த...

2026-10-15 12:07:28
news-image

காகித விமானங்களை வாயினாலேயே கவ்விப் பிடித்து...

2026-10-14 14:04:50
news-image

விடாமுயற்சிக்கு வயது தடையில்லை: 5 மணி...

2026-10-12 14:10:55
news-image

இன்று வானில் தென்படும் சனியின் ‘எதிர்நிலை...

2026-10-04 16:14:53
news-image

டோக்கியோவில் கலக்கிய ‘பவள மல்லி’: ஜப்பானியர்களிடையே...

2026-10-03 17:55:05
news-image

“Back to the 80s” ட்ரெண்டில்...

2026-09-17 14:52:19
news-image

ரணில் ராஜபக்சக்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்...

2026-09-14 16:05:42