வவுனியா பள்ளிவாசலை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் போராட்டம்

Published By: Priyatharshan

31 Oct, 2017 | 12:52 PM
image

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சட்டவிரோத வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரி இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இன்று காலை நகரபள்ளி வாசலுக்கு முன்பாக ஒன்றிணைந்த இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட வியாபார நிலையங்களை அகற்றுவதற்கான தமது போராட்டமே இது, இனங்களுக்கிடையே மதங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல இதை தவறாக புரிந்துகொள்ளவேண்டாம். கடந்த 1995ஆம் ஆண்டு 16 வியாபார நிலையங்களுக்கு அப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது 80 ற்கும் அதிகமாக வியாபார நிலையங்கள் சட்டவிரோதமான முறையில் நடைபாதையிலும் பள்ளியை அண்மித்த பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. வவுனியா நகரசபையில் முன்னர் ஆட்சிபுரிந்த அரசியல் பிரமுகர்கள் இதற்கு அனுமதியளித்துள்ளனர்.  

இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் குறிப்பாக வீதி அதிகாரசபையிடம் வினவியபோது அரசியல் தலையீடு காரணமாக முன்னர் அவற்றை அகற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். நடைபாதையில் வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோருவதுடன் அகற்றும் வரை எமது போராட்டத்தினை தொடருவோம் என்றும் இன்று போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர். தயாபரன் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இச்சம்பவம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபையிடமே உள்ளதாகவும் இவ்விடயமாக தலையிடுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை ஆனால் இன்று இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக வீதி அதிகாரசபையினருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் கடிதம் ஒன்றினை அனுப்ப முடியும் என்றும் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள் நகரசபை செயலாளருக்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வியாபார நிலையங்களின் வரைபடம், வழங்கப்பட்ட கடைகளின் விபரங்களை தற்போது உள்ள கடைகளின் விபரங்களையும் ஒன்றிணைத்து மகஜராக கையளித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02