சாண்ட்விச் மற்றும் துவாய் வழக்கில் வெற்றி பெற்றார் கெய்ல்

Published By: Digital Desk 7

30 Oct, 2017 | 05:55 PM
image

தன்னைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்ட  அவுஸ்திரேலியா செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றார்.

செய்தி நிறுவனமான பேர் பேக்ஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டது.

பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில் கிறிஸ் கெய்ல் 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உதவியாக இருந்த பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தது.

இதற்கு கெய்ல் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நிறுவனத்தை தொடர்ந்து  அவுஸ்திரேலியாவில் உள்ள பல பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிட்டன. இதனால் மிகவும் கோபமடைந்த கெய்ல் பேர் பேக்ஸ் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

கிறிஸ் கெய்லிற்கு எதிராக ருசேல் என்ற அவுஸ்திரேலியா பெண் சாட்சி கூறினார். ஆனால் அவர் தகுந்த ஆதாரங்கள் வழங்காததால் இந்த வழக்கு கிறிஸ் கெய்லிற்கு சாதகமாக முடிவடைந்தது. 

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் 'நான் எந்த தவறும் செய்ய வில்லை. வழக்கில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என சிட்னியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு,

பணி பெண்ணிடம் பிறப்பு உறுப்பை காட்டிய கெய்ல் : சாட்சி விசாரணைகள் முடிவு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07