பல கேள்விகளை எழுப்பும் ராஜ் சோமதேவவின் அறிக்கை

25 Oct, 2026 | 11:59 AM
image

செம்­மணி மனிதப் புதை­குழி விவ­காரம் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணைப் பங்­க­ளிப்­புடன் மர­பணு பரி­சோ­த­னைகள் செய்­யப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்ற விடயம் தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச மட்­டத்­திலும் உள்­நாட்டு மட்­டத்­திலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற பின்­ன­ணியில், தொல்­லியல் நிபுணர் பேரா­சி­ரியர் ராஜ் சோம­தேவ அளித்­துள்ள அறிக்கை பல சர்ச்­சை­களை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

செம்­மணி மனிதப் புதை­கு­ழியில் புதைக்­கப்­பட்ட உடல்­களின் எண்­ணிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்­கு­கையில், அவை தொற்று நோயி­னாலோ அல்­லது இயற்கை அனர்த்­தத்­தி­னாலோ இறந்­த­வர்­களின் உடல்­க­ளாக இருக்­கக்­கூ­டுமோ என்ற கேள்வி எழு­வ­தா­கவும், அங்கு இறந்­த­வர்­களின் தனிப்­பட்ட உட­மை­களை சேர்த்துப் புதைப்­பதை விடவும், அவர்­களின் உடல்­களை விரை­வாக அடக்கம் செய்­வது பிர­தான கருப்­பொ­ரு­ளுக்­கு­ரிய விட­ய­மாக இருந்­தி­ருக்­கலாம் என்றும் அவர், யாழ். நீதிவான் நீதி­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­தி­ருக்­கின்ற அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

மேலும், ‘செம்­ம­ணியில் ஆடைகள், துணிகள் பெரு­ம­ளவில் அகழ்ந்­தெ­டுக்­கப்­ப­டா­மை­யினால் அங்கு அடக்கம் செய்­யப்­பட்­ட­வர்­களின் உடல்­களில்    ஆடைகள் இருக்­க­வில்லை என்­ப­தனை உறு­தி­யான சான்­றாக கரு­து­வதை விட, அதனை ஒரு புதை­ப­டிவ சிதை­வுசார் அவ­தா­னிப்­பா­கவே கரு­துவேன்’ என்றும் ராஜ் சோம­தேவ அவ­ரது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

 அந்­த­வ­கையில், ராஜ் சோம­தேவ வெளி­யிட்டு இருக்­கின்ற இந்த அறிக்கை பல கேள்­வி­களை எழுப்பி நிற்­கி­றது. அவர் சரி­யான விட­யங்­களை ஆராய்ந்து இருக்­கி­றாரா? ஏன் இப்­படி அறிக்கை வெளி­யிட்டார்? இதற்கு முன்னர் அவர் வெளி­யிட்ட மூன்று அறிக்­கை­களில் ‘மனிதப் புதை­கு­ழிகள்’ என்ற சொல் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இதில் அந்த சொல் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஏன் இவ்­வாறு அவர் செய்­தி­ருக்­கின்றார் என்ற கேள்­விகள் இங்கு எழு­கின்­றன.

 தற்­போது அவ­ரு­டைய அறிக்­கைக்கு எதி­ராக யாழ். நீதி­மன்றில் மனு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.  அதே­போன்று பாரா­ளு­மன்­றத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடு­மை­யாக தமது விமர்­ச­னங்­களை வெளி­யிட்­டி­ருக்­கி­றார்கள்.

ராஜ் சோம­தேவ, கோட்­டா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது நிய­மித்த தொல்­லியல் தொடர்­பான குழுவில் அங்கம் வகித்­தவர் என்றும் அவர் நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­வாக செயல்­ப­டு­கிறார் எனவும் குற்­றச்­சாட்­டுகள்   முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், கோடீஸ்­வரன் ஆகியோர் இந்த விடயம் தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

தற்­போது செம்­மணி மனிதப் புதை­குழி தொடர்பில் சர்ச்­சைக்­கு­ரிய அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. ஏற்­கெ­னவே இந்த புதை­குழி தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்­கப்­பட்டு வந்­தது. அந்தக் கோரிக்­கையின் நியா­யத்தை தற்­போது வெளி­யி­டப்­பட்­டி­ருக்கும் ராஜ் சோம­தே­வவின் அறிக்கை நியா­யப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

செம்­மணி மனிதப் புதை­கு­ழியில் இது­வரை 580 இற்கும் மேற்­பட்ட எலும்புக் கூடுகள் முழு­மை­யாக மீட்­கப்­பட்­டுள்­ளன. இத­னை­விட 51 எலும்புக் குவி­யல்­களும் மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. சிறு­ வர்­களின் எலும்புக் கூடுகள் மற்றும் சிறு­வர்­களின் பாட­சாலை உப­க­ர­ணங்கள், பால் போச்சி என்­ப­னவும் மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒரு­சில எலும்புக் கூடுகள் அமர்ந்த நிலையில் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. அதா­வது, அந்த உடல்கள் அமர்ந்­தி­ருந்­த­வாறு புதைக்­கப்­பட்­டி­ருந்­ததை அவை வெளி­காட்­டி­யி­ருந்­தன.

இந்தப் பின்­ன­ணியில் இது தொடர்பில் முழு­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற விடயம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது. அர­சாங்­கமும் இது தொடர்­பாக முழு­மை­யாக விசா­ரணை நடத்­தப்­படும் என்று அறி­வித்­தி­ருக்­கி­றது. நீதி அமைச்­சரும் அங்கு விஜயம் செய்து புதை­கு­ழியை பார்­வை­யிட்­டி­ருந்தார். அதே­போன்று ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் பிர­தி­நி­தி­களும் செம்­மணி மனித புதைக்­கு­ழி­யி­டத்­திற்கு சென்று அங்கு  நிலை­மை­களைப் பார்­வை­யிட்­டி­ருந்­தனர். செம்­மணி தொடர்பில் ஒரு நீதி­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்­கின்ற விட­யத்தை அவர்கள் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்கள்.

அந்­த­வ­கையில் தொடர்ச்­சி­யாக இந்த விடயம் சர்­வ­தேச மற்றும் உள்­நாட்டு மட்­டத்­திலும் பேசப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் அவை­யிலும் இந்த விடயம் தற்­போது வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. செம்­மணி என்­பது இன்று இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மீறல்­க­ளுக்­கான ஒரு சர்­வ­தேச ரீதி­யான அடை­யா­ள­மாக காணப்­ப­டு­கி­றது. அது தொடர்­பாக அண்­மையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த இலங்­கையை பூர்­வீ­க­மாகக் கொண்ட கனே­டிய அமைச்சர் ஹரி ஆனந்­த­சங்­கரி, செம்­மணி மனிதப் புதைக்­கு­ழி­யா­னது இலங்­கையில் இன­வ­ழிப்­புக்கு மத்­தியில் வாழ்ந்த மக்கள் முகம்­கொ­டுத்த அள­வில்லா துன்­பங்­க­ளையும் மீறல்­க­ளையும் மீள நினை­வூட்­டு­வ­துடன், கடந்­த­கால மீறல்­க­ளுக்கு நீதி­கோரி உல­க­ளா­விய ரீதியில் ஒன்­றி­ணைந்து பொறுப்­புக்­கூ­றலை நோக்­கிய பாதையில் பய­ணிக்க வேண்­டிய தேவைப்­பாட்டை உணர்த்தி இருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

இவ்­வாறு, இது தொடர்­பாக தொடர்ச்­சி­யாக பல விட­யங்கள் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இதற்­கி­டையில் தொல்­லியல் பேரா­சி­ரியர் ராஜ் சோம­தே­வவின் அறிக்­கையும் சர்ச்­சையை எழுப்­பி­யி­ருக்­கி­றது.

ஏன் இவ்­வா­றான அறிக்கை ஒன்று வெளி­யி­டப்­பட்­டது என்ற கேள்வி எழு­கி­றது. அதுவும் முன்­னைய அறிக்­கை­க­ளுக்கு முற்­றிலும் மாறு­பட்ட அறிக்­கையை ஏன் இம்­முறை இவர் வெளி­யிட வேண்டும் என்ற கேள்வி எழு­கி­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும், இது தொடர்­பாக ஒரு விரி­வான, சர்­வ­தேச, பரந்­து­பட்ட சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

மிக விசே­ட­மாக, மர­பணு ரீதி­யான பரி­சோ­தனை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சியம். அப்­பொ­ழு­துதான் இதன் உண்­மையை கண்­டு­பி­டிக்க முடியும். இது தொடர்­பான ஒரு மர­பணு தட­வியல் பரி­சோ­த­னையை செய்­வதன் ஊடா­கவே சம்­பவ காலம், எவ்­வாறு இவர்கள் புதைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்ற கேள்­வி­க­ளுக்கு பதில் தேடலாம்.

பேரா­சி­ரியர் ராஜ் சோம­தேவ தனது அறிக்­கையில் “இங்கு கண்­ட­றி­யப்­பட்ட பொருட்­களில் பல தாயத்­துக்கள் மற்றும் குறிப்­பி­டத்­தக்க எண்­ணிக்­கை­யி­லான இலங்கை நாண­யங்­களும் அடங்­கு­கின்­றன. இவை மனித எச்­சங்­க­ளுடன் இணைந்து காணப்­ப­டு­வ­தா­னது இறந்­த­வ­ருடன் தொடர்­பு­டைய சடங்கு நடை­மு­றை­களின் ஓர் அங்­க­மாக இருந்­தி­ருக்கக் கூடுமா என்ற கேள்­வியை எழுப்­பு­கி­றது. எனினும், தொல்­லியல் குழுவின் அடிப்­ப­டையில் மாத்­திரம் அவற்றின் வகைப்­பாட்டை துல்­லி­ய­மாக உறு­திப்­ப­டுத்தி விட முடி­யா­து”­என்று குறிப்­பிட்­டுள்ளார்.

ஆனால், ராஜ் சோம­தே­வவின் அந்த சர்ச்­சைக்­கு­ரிய அறிக்­கை­யா­னது ஒரு பரந்­து­பட்ட, விரி­வான ,சுயா­தீ­ன­மான ,சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் கூடிய விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தி நிற்­கின்­றது.

செம்­மணி மனிதப் புதைக்­கு­ழி­களில் இது­வரை 580 இற்கும் மேற்­பட்ட எலும்புக் கூடுகள் மீட்­கப்­பட்­டுள்­ளன. பல கோணங்­களில் இந்த எலும்புக் கூடுகள் மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே, இது தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். மேலும் எலும்புக் கூடுகள் குவி­ய­லா­கவும் மீட்­கப்­பட்­டுள்­ளன. அத­னால்தான் மக்கள் மத்­தியில் ஓர் அதிர்ச்­சியும் அச்­சமும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. இது எப்­போது நடந்­தது, ஏன் நடந்­தது, எப்­படி நடந்­தி­ருக்­கலாம் என்ற கேள்­விகள் இங்கு எழு­கின்­றன. அதனால் இது தொடர்­பாக சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் கூடிய ஒரு விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

இந்த விடயத்தில் ஒரு மரபணு வங்கியை உருவாக்க வேண்டும் என்று அண்மையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்திருக்கிறது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு மரபணு வங்கியை உருவாக்குவதன் ஊடாக எதிர்காலத்திலும் இந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த முடியும், உண்மையைக் கண்டறிய முடியும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே, அனைத்து விடயங்களையும் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டி இருக்கிறது.  

இங்கு சர்வதேச பங்களிப்புடன் கூடிய ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லை. எனவே, அரசாங்கம், சர்வதேச சமூகம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, சிவில் சமூக தரப்பினர், அரசியல் கட்சிகள் பாதிக்கப்பட்ட தரப்பினர் என சகலரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதற்கு ஏற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீள் பரிசீலனைக்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டியது...

2026-11-01 11:37:44
news-image

பல கேள்விகளை எழுப்பும் ராஜ் சோமதேவவின்...

2026-10-25 11:59:25
news-image

அனோஜன் விவ­காரம் கற்­பித்­துள்ள மிக முக்­கிய...

2026-10-18 09:32:13
news-image

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள்

2026-10-11 16:09:11
news-image

யுத்த வடுக்களை நீக்குவதற்கும் நல்லிணக்கத்துக்கும் என்ன...

2026-10-04 10:22:46
news-image

சூத்திரதாரிகளை கண்டறியும் விசாரணையை தொடருங்கள்

2026-09-27 15:04:33
news-image

தமிழ்ப் பேசும் மக்கள் பேரவையின் துரித...

2026-09-20 17:19:18
news-image

ஜெனிவா கூட்டத் தொடரும் நீதிக்கான போராட்டங்களும்

2026-09-13 15:24:39
news-image

தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா ஐ.நா. மனித உரி­மைகள்...

2026-09-06 15:44:48
news-image

உண்மைகளை தொடர்ந்து மறைத்து வைக்கக் கூடாது

2026-08-30 14:09:47
news-image

கட்டுக்கதைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது

2026-08-23 12:19:51
news-image

அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்காதது...

2026-08-16 08:35:16