தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவர்கள் இன்று யாழ்.கைதடி ஏ-9 வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இன்று காலை 9 மணி தொடக்கம் சுமார் 2 மணி நேரம் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

இதன்போது நல்லாட்சி அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். என்ற கோஷங்களை எழுப்பியவாறும் கோஷங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் வகுப்புக்களையும் புறக்கணித்திருந்தார்கள்.