வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

இச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தைப்பகுதியிலிருந்து வவுனியாவிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்றும் பால் கொள்வனவிற்காகச் சென்ற கொள்கலன் வாகனம் ஒன்றுமே விபத்திற்குள்ளாகியுள்ளது.

ஓமந்தை பனிக்கர்நீராவியடி பகுதியில் இருந்து வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்றபோதே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இதில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்கள் 24 பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.