ஸ்பெய்னில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் பெண் ஒருவரை அகதிகள் சிலர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சுற்றுலா பயணி தன்னை ஒருவர் வணிக வளாகத்தில் உள்ள கழிவறை மறைவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய அங்கிருந்த சி.சி. டீவி கேமராவை சோதனை செய்ததில் குறித்த  பெண்னை 5 பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்துள்ளது.

குறித்த பெண் போதையில் இருந்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் பலாத்காரம் செய்த 5 பேர் சட்டவிரோதமாக ஸ்பெய்னில் தங்கி இருப்பவர்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸார் 4 பேரை கைது செய்துள்ளனர். ஐந்தாம் நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.