"தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டங்கள் பல நடத்தியுள்ளனரே தவிர நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை" என தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 2,864 காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு யந்த கருணாதிலக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கமான தோட்ட தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பெயர் விளங்கும் வகையில் சிலோன் டீ யை உலக சந்தைக்கு அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்கள்.

இவர்களின் 150 வருட கால வாழ்க்கை முறையில் 5 பரம்பரைகளை கொண்ட இவர்கள் மன உறுதியுடன் செயலாற்றும் மக்கள் வீடு மற்றும் காணி உரிமைகள் ஏதும் இன்றி இருந்த இம்மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை நிரூபிக்கும் வகையில் தனி வீடுகளும் காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டதன் ஊடாக நிரூபனமாகியுள்ளது.

இளம் அமைச்சரான திகாம்பரம் அவர்கள் இம்மக்களின் வாழ்வதாரம் மற்றும் வாழக்கை முறையில் மாற்றங்களை கொண்டு வந்து ஏனைய சமூகத்துடன் சரி நிகராக இம்மக்களை வாழவைக்கும் இலக்கினை கொண்டவர் பரம்பரையாக தேயிலை மண்ணுக்கு தமது வியர்வைகளை சிந்தி மாய்ந்து உரமாகவும் ஆக்கப்பட்ட இம்மக்களுடைய வாழ்க்கை முறையில் புதிய மொழியை ஏற்றுவதற்கு நாட்டின் தலைவரான ஜனாதிபதி மற்றும் பிரதமர் நல்லாட்சி அரசாங்கத்துடன் வித்திட்டுள்ளனர்.

தனக்கு ஒரு நிலம் இல்லை. வீடு இல்லை என வேதனையுடன் தேயிலை செடிக்குள் மத்தியில் வாழந்த மலையகத்தின் மூதாதையர்கள் கண்ட கனவு இன்று பழித்துள்ளது. அவர்களில் உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்கள் இந்த வேளையில் சந்தோஷமடைவர்.

வெள்ளையர்களால் நடை மூலமாக அழைத்து வரப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி சிறந்த மன உறுதியுடன் தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து செல்கின்றனர்.

கொக்கோ, கோப்பி, தேயிலை என விவசாய உற்பத்திகளை மேற்கொண்ட இவர்களுள் தேயிலை உற்பத்தி உலகளாவிய ரீதியில் முதல் இடத்தை வைக்கும் நிலையினை நாட்டுக்கு உருவாக்கி கொடுத்துள்ளனர்.

லயன் காம்பிராக்களில் வரிசை வீட்டுக்கு அப்பால் தனி வீடுகளை அமைத்தும் 7 பேர்ச் காணிக்கு உறுதியானவர்களாவும் இன்று மாற்றம் பெற்றுள்ள இவர்கள் கிராம வாழ்க்கையில் கால் அடி எடுத்து வைத்து மாற்று சுய தொழில்களை அவரவர் இடத்தில் கொண்டு செல்லும் நிலைக்கும் ஆளாகியுள்ளனர்" என தெரிவித்தார்.

தொழிலாளர்களின் பிள்ளைகளின் தேயிலை தொழிலில் ஈடுப்படுவதைவிடுத்து வைத்தியர்க்ளஇ பொறியலாளர்கள்இ சட்டதரணிகள் என உயர் தொழிலை பெற்று எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவதுடன் எமது அரசாங்கமும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தனி வீடும்இ வீட்டுக்கான நில உரிமையும் இன்று பெற்றதன் ஊடான இந்த நாட்டின் உணுண்மையான பிரஜா உரிமை பெற்ற மக்களாக சுதந்திரமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையை வைத்தும் நில உரிமையும் வைத்தும் பல்வேறு அரச தேவைகளை இவர்கள் பூர்த்தி செய்துக் கொள்ள முடியும். வங்கி கடன் பாடசாலைகளுக்கான உறுதி மாடிக்கு மேல் மாடி வீடு என பல அனுபவிப்புகளை இவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தனது உரையில் தெரிவித்தார்.