(ஜவ்பர்கான்)
காத்தான்குடி கடற்கரை வீதியில் நேற்று  மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த சஹீட் என்ற சிறுவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி கடற்கரை வீதியை சிறுவன் கடக்க முற்பட்ட வேளை  வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. 

இந்நிலையில், மோட்டார் சைக்கிளைச்  செலுத்திய 19 வயதுடைய இளைஞன் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.