சோகத்தில் மூழ்கியது யாழ்ப்பாணம் : தாயின் உடல் தகனம்,  குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம்

Published By: Priyatharshan

29 Oct, 2017 | 05:12 PM
image

யாழ்பாணம், அரியாலை பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக யாழ். அரியாலை பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை 28 வயதான இளம் தாய், தனது 4 வயதான பெண் குழந்தைக்கும், 2, 1 வயதுகளையுடைய ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்திருந்தார்.

ஒரு கோடி 17 இலட்சம் ரூபா பணத்தை நெருக்கமான நண்பருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து விட்டு ஏமாற்றம் அடைந்த காரணத்தினால் குறித்த பெண்ணின் கணவர் முதலில் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பெண் மன உளைச்சலுக்குள்ளாகி இருந்த காரணத்தினாலும், கணவரின் பிரிவை தாங்க முடியாத நிலையில் தனது 3 பிள்ளைகளுக்கும் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் விஷம் பருகி உயிரிழந்துள்ளார்.

இதன்போது தனது மரணத்திற்கு காரணம் இவர்கள் தான் என குறிப்பிட்டு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே பலியாகியதால் யாழ் நகரமெங்கும் முழுதும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்ற நிலையில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், தாயின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04