(ஆர்.யசி)

ஐக்கிய இலங்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது, தேசிய உற்பத்திகளை பாதுகாத்து மக்களை வாழ வைக்கும் திட்டங்கள் குறித்து ரணில், மைத்திரி, மஹிந்த தரப்புடன் விவாதிக்க தயாரென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

ரணில், மைத்திரி, மஹிந்த மூன்று தரப்பினையும் விரட்டியடித்து மக்கள் ஆட்சியினை உருவாக்க வேண்டும், அதற்காக ஜே.வி.பி போராடும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஒக்டோம்பர் புரட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.