சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி இன்று கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for சைட்டம் virakesari

சைட்டம் நிறுவனத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் அரச வைத்தியசாலைகளில் பயிற்சிகளைப் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, சைட்டம் நிறுவனத்திற்கு புதிதாக மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.