துக்கத்திலிருந்து விழித்தெழுவதற்கு சோம்பல்படுபவர்களை கன்னத்தில் அறைந்து எழுப்புவதற்காக அலாரம் கடிகாரமொன்றை சுவீடன் நாட்டை சேர்ந்த சிமோன் ஜியெர்ட்ஸ் (25) என்ற இளம் பெண் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

இந்த கடிகாரத்தை தலைக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்கினால், உரிய நேரத்தில் அலாரம் அடிப்பதுடன், கடிகாரத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள கையானது, குறித்த நபரின் கன்னத்தில் அறைந்து எழுப்பும். 

உணவு பெட்டி, சிறிய மோட்டார், ஹலோவின் பண்டிகைக்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்திக் கை ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த அலாரம் கடிகாரத்தை சிமோன் ஜியெர்ட்ஸ் தயாரித்துள்ளார்.