8 மாத கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியசாலை

Published By: Digital Desk 7

28 Oct, 2017 | 05:08 PM
image

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை பிரித்தானியர் என்பதை உறுதி செய்யக் கேட்டு வைத்தியசாலை ஒன்று சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரித்தானியாவில் உள்ள Addenbrooke பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக முன்பதிவு செய்த Emma Szewczak-Harris கர்ப்பினித்தாய்க்கே குறித்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த கர்ப்பினித் தாயின் பெயர் போலந்து நாட்டவர்களின் பெயரைப் போல் உள்ளதாக கூறியே  சிகிச்சைக்கான முன்பதிவை ரத்து செய்துள்ளதாகவும் பிரித்தானியர் என்பதை உறுதி செய்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் எனவும் குறித்த வைத்தியசாலையானது கடிதம் எழுதியுள்ளது.

வைத்தியசாலையின் இந்த மனிதாபிமானமற்ற செயலானது 8 மாத கர்ப்பிணியான தன்னை இரண்டாம்தர குடிமகளாக எண்ண வைத்துள்ளது எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இது தமக்கு நேர்ந்த அவமரியாதை எனக் கூறும் குறித்த கர்ப்பினித் தாய் தேவையான ஆவணங்களை தரவில்லை என வைத்தியசாலை தெரிவித்துள்ளதற்கு ஆவணங்களை இணைக்க வேண்டும் என குறித்த வைத்தியசாலை கோரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலந்து நட்டவரை திருமணம் செய்துள்ள எம்மா கர்ப்பிணியாக இருக்கும் தாம் பல முறை வைத்தியசாலை சென்றிருப்பதாகவும் ஆனால் இதுவரை எவரும் ஆவணங்கள் கேட்டு இம்சித்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 26 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் தமக்கு இதுவரை இதுபோன்ற ஒரு சிக்கல் எழுந்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52