இணைய அறிமுகம் உள்ளவர்களுக்கு ‘கெப்ட்சா’ கடவுச் சொல் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ஒரு தளத்தின் சேவையைப் பெறுவதற்கு, கணினியை இயக்குவது இயந்திரமல்ல... மனிதர்தான் என்பதை நிரூபிப்பதற்கானதே இந்த கெப்ட்சா கடவுச் சொல்.

திரையில் தெரியும் எழுத்துக்களை அல்லது எண்களை அல்லது இரண்டும் கலந்த கலவையை விசைப் பலகை மூலம் உள்ளீடு செய்யவேண்டும். இதுவே கெப்ட்சா கடவுச் சொல்லின் விதிமுறை.

தற்போது, திரையில் தெரியும் எழுத்துக்களை அல்லது எண்களைப் பார்த்து, ‘புரிந்து’, அதை விசைப் பலகை மூலம் உள்ளீடு செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

திரையில் தெரியும் எழுத்துக்களையும், இலக்கங்களையும் அதன் அமைப்பைக் கொண்டு புரிந்துகொள்ளும் வகையில் ‘நியூரல்’ வலையமைப்பு மூலம் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்.