மெக்ஸிகோவில், முதன்முறையாக 1.7 மெட்ரிக் தொன் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவின் பசிபிக் கரையோரத்தில் இருந்து 425 கிலோமீற்றர் தொலைவு கடல் பகுதியில், நீர்மூழ்கிக்கு நிகரான ஒரு படகிலேயே கொக்கெய்ன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கைப்பற்றப்பட்ட கொக்கெய்னின் மதிப்பு 42 மில்லியன் அமெரிக்க டொலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படகைச் செலுத்தி வந்த கொலம்பியாவைச் சேர்ந்த மூவரையும் குவாதமாலாவைச் சேர்ந்த ஒருவரையும் மெக்ஸிகோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராடாரில் எளிதில் சிக்காத வகையில் அமைக்கப்பட்ட இந்தப் படகின் கீழ்த் தளத்தில், முழுவதுமாக மூடப்பட்ட இரகசியத் தளத்தில் நீர்புகாத வண்ணம் இந்த கொக்கெய்ன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.