முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டு இன்று இந்­தி­யாக்கு­ செல்லவுள்­ள­தாக அவரின் பிரத்­தி­யேக செய­லாளர் உதித் லொகு­பண்­டார தெரி­வித்தார்.

சர்­வ­தேச பெளத்த கலா­சார சம்­மே­ளனம் மக­ராஷ்­டிரா மாநி­லத்தில் நடத்­த­வுள்ள பெளத்த கலா­சார மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்காகவே அவர் அங்கு பய­ண­மா­க­வுள்ளார்.

இம் மாநாட்டில் கலந்­து­கொண்டு பிர­தான உரை­யாற்­று­மாறு அச்­சம்­மே­ள­னத்தின் பிர­தா­னிகள் முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் கேட்டுக் கொண்­டனர்.  இதற்­கி­ணங்க அவர் அம்­மா­நாட்டில் பிர­தான உரை­யாற்­ற­வுள்­ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.