மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்பு வதந்தி மறுப்பு: மின் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பும் என தகவல்

Published By: Digital Desk 2

17 Oct, 2026 | 03:55 PM
image

நாடு தழுவிய மின்தடையைத் தொடர்ந்து பல மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதாக வெளிவந்த தகவல்களைத் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்  முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், எந்தவொரு மின்னுற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகளும் செயலிழக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

மின்கட்டமைப்பு செயலிழப்பதற்கு முன்னர் இயங்கிக் கொண்டிருந்த அனைத்து நீர்மின் நிலையங்களும் தொடர்ந்தும் இயங்கும் நிலையிலேயே இருப்பதாகவும், தற்போது மின் விநியோகத்தை மீள வழங்குவதற்காக அவை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவன்றி, கட்டமைப்புத் தோல்வியைத் தொடர்ந்து நிலையான வழிமுறைகளின்படியே  நொரொச்சோலை நிலக்கரி மின் நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மதியம் முதல் பகுதி பகுதியாக மின் விநியோகம் வெற்றிகரமாக மீள வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை (17) மாலை 6.30 மணியளவில் தேசிய மின்சாரக் கட்டமைப்பு முழுமையாக இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு தழுவிய அளவிலான மின்சாரத் தடையைத் தொடர்ந்து பல மின்னுற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதாக  பரவிய வதந்திகளுக்கே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக்...

2026-11-08 12:41:38
news-image

திருகோணமலை கப்பல்துறை துப்பாக்கிச் சூடு மற்றும்...

2026-11-08 16:21:29
news-image

தெனியாய ஆற்றில் மூழ்கி காணாமல்போன நால்வரில்...

2026-11-08 16:11:53
news-image

பயங்கரவாத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சட்டமூலங்கள்:...

2026-11-08 15:07:06
news-image

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்...

2026-11-08 14:59:26
news-image

கொழும்பின் வடிகால் கட்டமைப்புகளால் 30 முதல் ...

2026-11-08 14:44:15
news-image

இலங்கையின் முதலீட்டு நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது -...

2026-11-08 14:25:58
news-image

கொழும்பு வெள்ளம் மாநகர சபையின் பொறுப்பற்ற...

2026-11-08 13:56:56
news-image

தேர்தல் முறைமை தெரிவுக்குழுவை புறக்கணித்த வடக்கு ...

2026-11-08 13:29:02
news-image

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு...

2026-11-08 13:25:06
news-image

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்திற்கு சர்வதேச...

2026-11-08 13:21:47
news-image

உலக வர்த்தகத்தின் இதயத்துடிப்பு இந்தியப் பெருங்கடல்...

2026-11-08 13:18:47