பார்வைக் குறைபாடுள்ள 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மூக்கு கண்ணாடிகளைப் பெற்றுக் கொள்வதற்காக தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பார்வை சவால்களுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு உதவும் நோக்கிலேயே இந்த நிதி உதவித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 40 வயதிற்கு மேற்பட்ட 22,500 பார்வைக்குறைபாடுள்ள நபர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் மூலம் இலவச கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மூக்கு கண்ணாடிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்குவதற்காக 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 21 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM