இண்டஸ்ஸசெப்ஷன் எனும் குடல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

17 Oct, 2026 | 02:25 PM
image

உலகளவில் பிறக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட ஒரு லட்சம் பிள்ளைகளில் 70 பிள்ளைகளுக்கு இண்டஸ்ஸசெப்ஷன் எனப்படும் குடல் பாதிப்பு ஏற்படுவதாகவும், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய திருக்கும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

பிறந்து மூன்று மாதம் முதல் இரண்டு வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு வயிறு வீக்கம், வாந்தி, குருதி கலந்த மலம் வெளியேறுதல், வலி ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால்.. பிள்ளைகளை உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்தியர்களை சந்தித்து சிகிச்சையும் ஆலோசனையும் பெற வேண்டும்.

இத்தகைய அறிகுறிகள் மருத்துவ மொழியில் விவரிக்கப்படும் இன்டஸ்ஸஸப்ஷன் என வகைப்படுத்தப்படுகிறது. அதாவது குடலின் ஒரு பகுதி அதன் மடிப்பு பகுதியில் அடுத்த குடலுக்கு நழுவி செல்வதாகும். இதன் காரணமாக குடலின் வழியாக திரவ உணவும், திட உணவும் செல்வது தடை படுகிறது.

குடல் வீக்கம் அடைந்து, குருதி கசிவு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்படுவதால், அப்பகுதி செயலிழக்க கூடும். இது ஒரு அவசரமான வைத்திய நிலையாகும். இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும்.

இத்தகைய பாதிப்பு இரைப்பை குடல் அழற்சி, சளி காய்ச்சல், பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமிகளின் இரைப்பை குடல் தொற்று, நோய் தொற்றை எதிர்த்து போராடும் நிணநீர் மண்டலத்தின் செயலிழப்பு, குடலின் உட்புற சுவரில் உள்ள திசுக்களின் வீக்கம் என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குள் இத்தகைய பாதிப்பு ஏற்படுவது அதிகம் என்றும், ஐந்து வயதிற்கு மேற்பட்ட சில பிள்ளைகளுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இவர்களுக்கு வைத்தியசாலையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் - எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மூலம் பாதிப்பை துல்லியமாக அவதானித்து, சில பிள்ளைகளுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிப்பார்கள். சில பிள்ளைகளுக்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலமாக இத்தகைய பாதிப்பை சீராக்குவார்கள்.

வைத்தியர் அருண்குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூக்கடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை-...

2026-11-14 15:45:24
news-image

இரத்த நாள அடைப்பை நீக்கும் நவீன...

2026-11-13 15:26:37
news-image

பிட்யூற்றரி மேக்ரோஅடினோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-11-12 15:10:08
news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47
news-image

வாஸ்குலர் ரிங் எனும் பிறவி இதயக்...

2026-11-02 13:47:27
news-image

கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும்...

2026-10-31 14:40:04