சந்தோஷ் பிரதாப் நடிக்கும் 'சிக்னல் அட் 11: 30 ' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

17 Oct, 2026 | 02:22 PM
image

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பிற்கு அடையாளமாக திகழும் நடிகர் சந்தோஷ் பிரதாப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சிக்னல் அட் 11:30' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஜோ ஜோ மா..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஷான் ரோல்டன் வெளியிட்டார்.

இயக்குநர் மலர் விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்னல் அட் 11:30 'திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த், ஆரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'மெலோடி சாம்ராட்' டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்பிரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜோ ஜோ மா நான் பெற்ற ராணி' எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பின்னணி பாடகர் ஹரி சரண் பாடியிருக்கிறார். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான உறவை விவரிக்கும் இந்த பாடலில் இடம் பிடித்திருக்கும் வரிகளும், குரலும், மெட்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜீ வி பிரகாஷ் குமாரின் 'அன்புடன்...

2026-11-17 13:29:12
news-image

துல்கர் சல்மான் நடிக்கும் 'ஏ ஓ...

2026-11-17 13:28:55
news-image

அறிமுக நடிகர் ஷாகிர் மனோ நடிக்கும்...

2026-11-17 13:28:38
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி'...

2026-11-17 13:28:09
news-image

டிசம்பரில் வெளியாகும் பிரபு தேவாவின் 'மூன்...

2026-11-17 13:15:45
news-image

நடிகை ராஷ்மிகா மந்தானா நடிக்கும் 'மைசா'...

2026-11-17 13:15:55
news-image

தெலுங்கு திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைபெற்ற...

2026-11-17 13:16:44
news-image

நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் 'மின்னும்...

2026-11-17 13:15:13
news-image

அஜித் குமாருடன் இணைந்த கன்னட சுப்பர்...

2026-11-16 15:05:46
news-image

'மொத ராத்திரி' பட நடிகர் டி...

2026-11-16 14:41:56
news-image

ஓவியா நடிக்கும் 'கிளிக்' படத்தின் தொடக்க...

2026-11-16 14:27:07
news-image

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும்...

2026-11-16 14:20:38