பதுளை மாவட்­டத்தில் 23 பாட­சா­லைகள் மண் சரி­விற்­குள்­ளாகும் அபாயப் பகு­தி­களில் இருப்­ப­தாக தேசிய கட்­டட ஆய்­வகம், ஊவா மாகாண சபைக்கு அறி­வித்­துள்­ளது.

சபையின் பிரதித் தலைவர் விம­ல­தாச கலங்­க­ம­ராய்ச்சி தலை­மையில், ஊவா மாகாண சபை மண்­ட­பத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்றகூட்டத்தின்  போதே , சபை பிர­தித்­த­லை­வ­ரினால் மேற்­கண்ட விபரம் அறி­விக்­கப்­பட்­டது.

அதற்­க­மைய பதுளை- தெல்­பத்தை வள்­ளுவர் தமிழ் வித்­தி­யா­லயம் மற்றும் கலை­மகள் தமிழ் வித்­தி­யா­லயம், பச­றை­யூர் தமிழ் வித்­தி­யா­லயம், பது­ளை ­தி­ய­னா­கலை தமிழ் வித்­தி­யா­லயம், ஹாலி-­எ­லை-­ மே ­மலை தமிழ் வித்­தி­யா­லயம், கோபோ தமிழ் வித்­தி­யா­லயம், வெலி­ம­டை­ வி­ஜய வித்­தி­யா­லயம், வெவே­கம வித்­தி­யா­லயம், பச­றை-­ர­கு­பொல முஸ்லிம் வித்­தி­யா­லயம், கன­வ­ரல்லை இலக்கம் 3 தமிழ் வித்­தி­யா­லயம், கோணக்­கலை தமிழ் வித்­தி­யா­லயம், கன­வ­ரல்லை இலக்கம் 1 தமிழ் வித்­தி­யா­லயம், ஹல்­து­முல்லை -வல்­ஹப்­பு­தென்ன மத்­திய மகா வித்­தி­யா­லயம், மீரிய­பெத்தை தமிழ் வித்­தி­யா­லயம், உட­வே­றியா தமிழ் வித்­தி­யா­லயம், ககா­கொல்ல தமிழ் வித்­தி­யா­லயம், பிங்­க­ராவை தமிழ் வித்­தி­யா­லயம், கினலன் தமிழ் வித்­தி­யா­லயம், ரொசட் தமிழ் வித்­தி­யா­லயம், லியங்­கா­வெல தமிழ் வித்­தி­யா­லயம், வேவெஸ்ஸ ஸ்ரீ இராம கிருஷ்ணா தமிழ் வித்­தி­யா­லயம், லுணு­கல அல் - அமீன் வித்­தி­யா­லயம், பண்­டா­ர­வ­ளை-­ ம­குல்­எல்ல வித்­தி­யா­லயம் ஆகி­ய­னவே மண்­ச­ரிவு அபாயம் ஏற்­பட்­டுள்ள பகு­தி­களிலுள்ள பாட­சா­லை­க­ளாகும்.  

இவற்றில் 18 பாட­சா­லைகள் தமிழ்ப் பாடசாலைகளாகவும், இரண்டு முஸ்லிம் பாடசாலைகளாகவும், மூன்று சிங்கள பாடசாலைகளாகவுமாக 23 பாடசாலைகள் மண்சரிவு ஏற்படும் அபாயப் பகுதியில் அடங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.