தி ரீல் ஃபைல்ஸ்: சீசன் 4' எனும்  ஆந்தாலஜி பாணியிலான தொடரின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

17 Oct, 2026 | 01:47 PM
image

டுபாயைச் சார்ந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜெனோஃபர் ஃபாத்திமா இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி ரீல் பைல்ஸ் :சீசன் 4' எனும் ஆந்தாலஜி பாணியிலான இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக டுபாயில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் பொலிவுட் நடிகர் சோஹைல் கான் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி, படக் குழுவினரை பாராட்டினார்.

இயக்குநர்கள் ஜெனோஃபர் ஃபாத்திமா-அப்ரா ஃபர்ஹானா ஆகியோர் இணைந்து இயக்கி இருக்கும்  'தி ரீல் ஃபைல்ஸ்: சீசன் 4 'திரைப்படத்தில் அப்துல் ரோசாக், இப்ராஹிம் சமதி,  ஜெனோஃபர் பாத்திமா, அகமது அல் மர்சுகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இதனை ஜென் பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 'தி ரீல் பைல்ஸ் :சீசன் 4 ' ஆந்தாலஜி பாணியிலான தொடரில் புதிய கதைகள் இடம்பெற்றுள்ளன.

இதில் முதல் கதையாக 'தி கான்ஜுரர்' தயாராகி விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.‌

இந்நிகழ்வில் இயக்குநர் பேசுகையில், '' குறும்படங்கள் மூலம் கதைகளை சொல்லும் ஒரு சிறிய முயற்சியாக இந்த பயணத்தை தொடங்கினேன். நான் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய ஆதரவுடன் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் ஒவ்வொரு சீசனிலும் புதிய பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கிறேன்.

அத்துடன் பலருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும், எங்களுடைய எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் இதன் மூலம் பெற்றுள்ளேன். எதிர்காலத்தில் எம்முடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள பொலிவுட் நடிகர் சோஹைல் கானுக்கு எம்முடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

இதனிடையே சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கும் படைப்பாளியான ஜெனோஃபர் ஃபாத்திமாவின் 'தி கான்ஜுரர்' திரைப்படம் எந்த டிஜிட்டல் தளத்தில், எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பொலிமேரா...

2026-11-10 16:28:21
news-image

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை...

2026-11-10 16:27:29
news-image

அறிமுக நடிகர் தீரன் நடிக்கும் 'வோல்டேஜ்'...

2026-11-10 16:27:07
news-image

நடிகர் நாகார்ஜூனாவின் 'கிங் 100' படத்தில்...

2026-11-10 16:26:34
news-image

விஜய் அண்டனியின் 'அப்பா குட்டி '...

2026-11-10 15:59:28
news-image

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி...

2026-11-09 16:34:53