தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – தமிழ் திரையுலகில் பெரும் சோகம்!

Published By: Digital Desk 2

17 Oct, 2026 | 12:30 PM
image

தமிழ் திரையிசையுலகில் தேனிசைத் தென்றலாக உலா வந்த இசையமைப்பாளர் தேவா ( 75) உடல்நல குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.

1950 ஆம் ஆண்டில் தேவநேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயருடன் சென்னையில் பிறந்து, தனது பெயரை தேவா என மாற்றியமைத்துக்கொண்டு திரைத்துறையில் 1986 ஆம் ஆண்டில் 'மாட்டுக்கார மன்னாரு' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன் திரை இசைப் பயணத்தை தொடங்கினார். 

தமிழில் மட்டும் இதுவரை 375 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இவர், தமிழை தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவான 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் இசையமைத்து பான் இந்திய இசையமைப்பாளராகவும் ஜொலித்தார்.‌

தமிழ் சினிமாவில் 'கானா' என்ற வடசென்னை மக்களின் பாரம்பரிய இசை வடிவத்தை அறிமுகப்படுத்தி, அதனை பிரபலப்படுத்தியவரும் தேவா தான்.‌ சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார்.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் அவருடைய இசையிலும், ஏனைய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி, ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்.‌ இசையமைப்பாளர்- பாடகர்- என்ற எல்லையை கடந்து பல திரைப்படங்களில் கௌரவ தோற்றத்திலும் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல இசை நிகழ்ச்சியான சுப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்வில் சிறப்பு அதிதியாகவும் பங்கு பற்றி சிறப்பித்தவர் தேவா.

அண்மையில் ஹிப் ஹாப் ஆதி தமிழா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மீசைய முறுக்கு 2 'திரைப்படத்தின் வெற்றி விழாவில் பங்கு பற்றி, கானா இசைக்கலைஞர்களை கௌரவித்த இவருக்கு திடிரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கும் முன்பே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இசையமைத்துக் கொண்டிருந்த தேவா 1990களில் தமிழ் திரையிசையுலகில் கொடிகட்டி பறந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

இசையமைப்பாளர் தேவாவிற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை இறுதி அஞ்சலி நடைபெறும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பொலிமேரா...

2026-11-10 16:28:21
news-image

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை...

2026-11-10 16:27:29
news-image

அறிமுக நடிகர் தீரன் நடிக்கும் 'வோல்டேஜ்'...

2026-11-10 16:27:07
news-image

நடிகர் நாகார்ஜூனாவின் 'கிங் 100' படத்தில்...

2026-11-10 16:26:34
news-image

விஜய் அண்டனியின் 'அப்பா குட்டி '...

2026-11-10 15:59:28
news-image

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி...

2026-11-09 16:34:53