இலங்­கையில் முத­லீ­டு­செய்­வ­தற்கு கட்டார் ஆர்வம் காட்­டு­வ­துடன் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் ரீதி­யி­லான உற­வு­களை வளர்த்துக் கொள்­வ­தற்கும் விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார். 

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், கட்டார் நாட்­டுக்­கான ஜனா­தி­ப­தியின் விஜயம் பெரு­வா­ரி­யாக வெற்­றி­ய­டைந்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்துச் செல்லும் திட்டம் தொடர்­பிலும் பெரு­வ­ர­வேற்பு கிடைத்­தது. 

எனவே கட்டார், இலங்­கை­யுடன் பொரு­ளாதார ரீதி­யி­லான உற­வு­களை வளர்த்துக் கொள்­வ­தற்கு மிகுந்த ஆர்வம் காட்­டு­கி­றது. ஆகவே எதிர்­கா­லத்தில் இலங்­கையில் முத­லீ­டு­செய்­வ­தற்கும் விருப்பம் காட்­டு­கி­றது. 

ஆதலால் அந்­நாட்­டுடன் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் ரீதி­யி­லான உற­வு­களை வளர்த்­துக்­கொள்ள முடியும். குறித்த விஜயத்தின்போது அந்நாட்டுடன் ஏழு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.