பாராளுமன்றம் ஒக். 20 முதல் 23 வரை கூடவுள்ளது - செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவிப்பு

16 Oct, 2026 | 06:00 PM
image

பாராளுமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இதற்கமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நிலையியற் கட்டளை 22 (1)இலிருந்து 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், 10 மணி முதல் 11 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், 11 மணி முதல் 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2)இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 11.30 மணி முதல் மாலை  5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் 21ஆம் திகதி புதன்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு என்பவற்றை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 5 மணிக்கு 5 சட்ட ரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன. 5 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின்போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் இரண்டு (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இதன் பின்னர் 5 சட்ட ரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.

அன்றைய தினம் 5 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின்போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின்போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் புறக்கணிப்பு; 2027...

2026-11-13 04:34:05
news-image

வரவு - செலவுத் திட்டம் வெறும்...

2026-11-13 04:31:47
news-image

அனோஜனை தனது மகன் எனக் கூறி...

2026-11-13 04:18:51
news-image

ஆழ்கடலில் போதைப்பொருளுடன் ஆழ்கடல் மீன்பிடி படகும்,...

2026-11-13 04:14:22
news-image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர்...

2026-11-13 04:12:27
news-image

யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் மேலதிக...

2026-11-12 23:00:52
news-image

எதிர்க்கட்சியின் யோசனைகளை நிறைவேற்றினால் ஜனாதிபதியுடன் தேநீர்...

2026-11-12 18:08:33
news-image

எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு லாஃப்...

2026-11-12 12:53:37
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின்...

2026-11-12 18:09:01
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!  

2026-11-12 22:04:48
news-image

அரசின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால்...

2026-11-12 12:45:37
news-image

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவை இரத்து...

2026-11-12 21:31:33