சர்­வ­தே­சத்தின் தேவைக்கு அமை­வா­கவே இலங்­கையில்  சமஷ்டி முறை­மை க்கு சம­னான  ஆட்சி முறையை நிறு­வு­வ­ தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கை யில் அர­சாங்­கத்தின்  அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பு முயற்­சியின் பின்­ன­ணியில் சர்­வ­தே­சமே  காணப்­ப­டு­கின்­றது என்று முன்னாள் பாது­காப்பு பேச்­சா­ளரும்   தற்­போ­தைய  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். 

இலங்­கையில் சமஷ்­டியை உரு­வாக்­கு­வதன் மூலம்  வடக்கு பிராந்­தி­யத்­துடன் தனித்து கொடுக்கல் வாங்­கல்­களை செய்­வ­தற்கே சர்­வ­தேச நாடுகள்  முயற்­சிக்­கின்­றன. அதற்­கா­கவே இவ்­வாறு   இலங்­கைக்குள்  சமஷ்டி முறை­மை­யி­லான  ஆட்­சியைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது என்றும்   அவர் குறிப்­பிட்டார்.  

புதிய அர­சி­ய­ல­மைப்பு  உரு­வாக்கம் மற்றும்  ஒற்­றை­யாட்சி ஒரு­மித்த நாடு  போன்ற விட­யங்கள் குறித்து  உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:

ஒரு­மித்த நாடு என்­பது சமஷ்டி  முறை­மைக்கு  ஒப்­பா­ன­தாகும்.  சில வேளை­களில் அது சமஷ்டி முறை­மையை விட அப்பால் செல்­லக்­கூ­டிய  நிலையைக் கொண்­டுள்­ளது.   மேலும்  தற்­போது  அர­சி­ய­ல­மைப்பு வரைபை தயா­ரிக்­காமல்  எதற்­காக  அறிக்­கையை முன்­வைத்­தார்கள்.  இந்த விட­யத்தில் என்ன செய்­யப்­பட்­டி­ருக்­க­வேண்டும் என நாம் சிந்­திக்­க­வேண்டும்.   

அதா­வது அனைத்துக் கட்­சி­க­ளி­னதும் யோச­னை­களைப் பெற்று  ஒரு வரைபை தயா­ரித்­தி­ருக்­கலாம்.  அந்­த­வ­ரைபு குறித்து நாம்  விவா­தித்­தி­ருக்­கலாம். ஆனால்  அர­சாங்கம்   அவ்­வாறு செய்­யாமல்  வெறும் அறிக்­கையை மட்டும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. இது சர்­வ­தே­சத்தை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக  செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதே உண்­மை­யாகும். 

மாகா­ண­சபை முறை­மை­யா­னது தற்­போது அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அதனை நாம் பலப்­ப­டுத்­தலாம். ஆனால்  அதி­லுள்ள குறை­பா­டு­களை   நிவர்த்தி செய்­து­கொள்­வ­தற்­குக்­கூட மாகா­ண­ச­பைகள் முயற்­சிப்­ப­தில்லை. 

உதா­ர­ண­மாக வட­மா­காண சபைக்கு 2000 மில்­லியன் வரு­டத்­திற்கு ஒதுக்­கப்­ப­டு­கின்­றது என்றால்  இறு­தியில் 800 மில்­லி­யன்­களே வழங்­கப்­படும்  நிலைமை காணப்­ப­டு­கின்­றது. எனவே இது­தொ­டர்பில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது  அவ­சி­ய­மா­கின்­றது.  ஆனால்   மாகா­ண­ச­பை­களை விட  பிர­தேச சபை­க­ளுக்கு  அதிக அதி­கா­ரங்­களை வழங்­க­வேண்டும் என்­பதே எனது நிலைப்­பா­டாகும். 

எனினும்  அர­சாங்கம்   இவை எல்­லா­வற்­றையும் விட்­டு­விட்டு  சர்­வ­தேச சமூ­கத்தை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக   ஒரு­மித்த நாடு என்ற  விட­யத்தை முன்­வைத்து  அறிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. 

இதன்­மூலம்  சர்­வ­தே­சத்­திற்கும்  பயன்­கி­டைக்­க­வுள்­ளது. அதா­வது சர்­வ­தே­சத்­திற்கு தேவை­யான  வகையில் இலங்­கையில் பிராந்­தி­யங்கள்  உருவாக்கப்பட்டு சமஷ்டி முறைமை ஏற்படுத்தப்பட்டால்  சர்வதேச நாடுகளுக்கு  பிராந்தியங்களுடன்   சுயாதீனமாக செயற்படும் வாய்ப்பு கிடைக்கும். 

குறிப்பாக வடமாகாணத்துடன்   தனித்து கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளவே  சர்வதேசம் விரும்புகிறது. அதற்காகவே இலங்கையில் சமஷ்டியை உருவாக்குவதற்கு சர்வதேசம் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றது என்றார்.