யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்கள் கையளிப்பு

16 Oct, 2026 | 05:45 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டில் இருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் எம்.நிசங்கவினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று வெள்ளிக்கிழமை (16) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன. 

இதற்கமைய, வலிகாமம் வடக்கு – தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 1.29 ஏக்கர் காணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 5.06 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 4.88 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர்  உ.தர்சினி மற்றும் மேஜர் கருணாரட்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய சட்டமூலத்திற்கு எதிராகப் போராட மக்களுக்கு...

2026-11-08 12:49:05
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக்...

2026-11-08 12:41:38
news-image

திருகோணமலை கப்பல்துறை துப்பாக்கிச் சூடு மற்றும்...

2026-11-08 16:21:29
news-image

தெனியாய ஆற்றில் மூழ்கி காணாமல்போன நால்வரில்...

2026-11-08 16:11:53
news-image

பயங்கரவாத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சட்டமூலங்கள்:...

2026-11-08 15:07:06
news-image

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்...

2026-11-08 14:59:26
news-image

கொழும்பின் வடிகால் கட்டமைப்புகளால் 30 முதல் ...

2026-11-08 14:44:15
news-image

இலங்கையின் முதலீட்டு நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது -...

2026-11-08 14:25:58
news-image

கொழும்பு வெள்ளம் மாநகர சபையின் பொறுப்பற்ற...

2026-11-08 13:56:56
news-image

தேர்தல் முறைமை தெரிவுக்குழுவை புறக்கணித்த வடக்கு ...

2026-11-08 13:29:02
news-image

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு...

2026-11-08 13:25:06
news-image

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்திற்கு சர்வதேச...

2026-11-08 13:21:47