தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 10 மில்லியன் ரூபாயை 'சிரிலிய சவிய' அமைப்புக்கு சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரலம இந்த பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ஷ தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அவசரமாக இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையின் வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வைத்திய அறிக்கையின் அவசரத் தன்மையைக் கருத்திற்கொண்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணக்கப்பாடு மற்றும் நீதிவானின் உத்தரவின் பேரில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM