புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்டு தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தலும், அதனை அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்கர் வராகொட ஞானரத்ன தேரர் மற்றும் அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரர் ஆகியோரிடம் கையளிக்கும் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை (15) அஸ்கிரி மகா விகாரையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
2027 ஆம் ஆண்டு முதல் 2 ஆம் மற்றும் 6 ஆம் தரங்களுக்குப் புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் புதிய நியமனங்களை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், மல்வத்து பீடத்தின் மகா நாயக்கர் திா்பொடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அனுநாயக்கர் நியங்கொட விஜிதசிரி தேரர் ஆகியோரிடமும் திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பைக் கையளித்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் வைத்தியர் சுரங்க பெர்னாண்டோ, மாநகர முதல்வர், உப மாநகர முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM