மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

16 Oct, 2026 | 04:06 PM
image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு  உடந்தையாக இருக்கும் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியும் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்துக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு இலஞ்ச ஒழிப்பு போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணிக்கு கல்லடியில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மாதர் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றுதிரண்டனர்.

“தடை செய் தடை செய் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்”, “அழிக்காதே அழிக்காதே மட்டக்களப்பு கடல் வளத்தை அழிக்காதே”, “சுருக்கு வலைக்கு  உடந்தையாக இருக்கின்ற உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்”, “வேண்டும் வேண்டும் இலஞ்சம் பெறாத நேர்மையான உத்தியோகத்தர் மட்டக்களப்புக்கு”, “சட்டவிரோத சுருக்கு வலை உரிமையாளர்களிடம் இலஞ்சம் பெறும் உத்தியோத்தர்களை பணி இடைநீக்கம் செய்”, “காத்தான்குடி பாலமுனையிலும் பூனெச்சிமுனையிலும் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடி தொழிலாளிகளான கிண்ணியாவைச் சேர்ந்த தொழிலாளர்களை வெளியேற்று”, “தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை உடனடியாக தடை செய்”, “வெளிமாவட்ட சட்டவிரோத சுருக்குவலை  தொழிலாளர்களை அனுமதிக்காதே”, “ஏழை மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே”  போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது  மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்த பின்னர்  ஆர்ப்பாட்டக்காரர்கள் 11 மணியளவில்  அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51
news-image

மூச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத...

2026-11-14 15:16:51
news-image

கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியல் துறை...

2026-11-14 15:06:10