திருகோணமலை, சீனக்குடாவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை கல்விப்பீடத்தில் புதிய ஆண் மற்றும் பெண் அதிகாரி மாணவர்களுக்கான பணிநியமனம் மற்றும் விமானிகளுக்கான சின்னங்கள் வழங்கும் அணிவகுப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை (16) நடைபெற்றது.
பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முப்படை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
குரூப் கேப்டன் சாமில் ஹெட்டியாராச்சியின் கட்டளையின் கீழ் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மற்றும் விமானப்படை பயிற்சிநெறிகளைச் சேர்ந்த 29 ஆண் அதிகாரிகள் மற்றும் 14 பெண் அதிகாரிகள் உட்பட மொத்தம் 43 பேர் உத்தியோகபூர்வமாக விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது தொகுதியைச் சேர்ந்த 'பறத்தல் அதிகாரி (பிளையிங் ஒபீசர்)' அதிகாரியொருவருக்கு விமானச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பயிற்சியில் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்குச் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
சீனக்குடா கல்விப்பீடத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் அமல் பெரேரா, விமானப்படை நிர்வாக வாரிய உறுப்பினர்கள், ஏனைய படைத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனம் பெற்ற அதிகாரிகளின் பெற்றோர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM