நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பொதுமக்களின் உதவிநாடும் பொலிஸார்!

16 Oct, 2026 | 03:24 PM
image

நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஒகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி 'விதிகுலிய, வதுரெஸ்ஸ' முகவரியைக் குறிப்பிட்டு, 'டீ.எம். ரத்நாயக்க' என்ற பெயரில் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக வைத்தியசாலையில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், உறவினர்கள் பற்றிய விவரங்களை இதுவரை கண்டறிய முடியவில்லை.

உயிரிழந்தவர் சுமார் 05 அடி 03 அங்குலம் உயரமுடைய, மாநிறமான மெலிந்த உடலமைப்பைக் கொண்டவராவார். அவரது மேல் தாடி மற்றும் கீழ் தாடி வளர்ந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது நிக்கவரெட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் தொடர்பான ஏதேனும் தகவல் அறியின் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்:

தலைமைப் பொலிஸ் பரிசோதகர் / நிக்கவரெட்டிய: 071 - 8591277
பொலிஸ் நிலையம் / நிக்கவரெட்டிய: 037 - 2260222

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம்...

2026-11-14 16:46:26
news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51