ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான 'ஆஷா'

Published By: Digital Desk 2

16 Oct, 2026 | 03:21 PM
image

தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமான நட்சத்திர நடிகை ஊர்வசி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஆஷா' எனும் சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் இன்று (16) வெள்ளிக்கிழமை முதல் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆஷா' திரைப்படத்தில் ஊர்வசி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் ,விஜயராகவன், லட்சுமிமேனன், பாக்யலட்சுமி உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சைக்காலஜிக்கல் திரில்லராக உருவான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரித்திருக்கிறார். பட மாளிகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் தற்போது ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

ஒரு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது ஒரு புறம் இதன் பின்னணியில் ஏற்பட்ட பட்டாம்பூச்சி விளைவு எனப்படும் பட்டர்ஃபிளை எபெக்ட் மறுபுறம் என எளிதில் பார்வையாளர்களால் அவதானிக்க இயலாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், இதற்கு டிஜிட்டல் தளத்திலும் பாரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன் பிள்ளைகளை பாதுகாக்க ஒரு தாயின் எல்லை கடந்த உணர்வு ரீதியான உளவியல் போராட்டத்தை உரக்க விவரிக்கும் இந்த ஆஷா திரைப்படம், டிஜிட்டல் தள ரசிகர்களிடத்திலும் வரவேற்பை பெறும் என அவதானிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி...

2026-11-11 16:18:12
news-image

புதுமுக நடிகர் கலேஷ் ராமானந்த் நடிக்கும்...

2026-11-11 16:09:10
news-image

கிருஷ்ண பக்தியை விவரிக்கும் 'சரணாகதி' படத்தின்...

2026-11-11 15:59:28
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர்...

2026-11-11 15:58:59
news-image

நடிகர்கள் தனுஷ் - மம்முட்டி இணைந்து...

2026-11-10 16:31:13
news-image

நடிகர் திலீஷ் போத்தன் நடிக்கும் 'பௌமா'...

2026-11-10 16:29:55
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பொலிமேரா...

2026-11-10 16:28:21
news-image

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை...

2026-11-10 16:27:29
news-image

அறிமுக நடிகர் தீரன் நடிக்கும் 'வோல்டேஜ்'...

2026-11-10 16:27:07
news-image

நடிகர் நாகார்ஜூனாவின் 'கிங் 100' படத்தில்...

2026-11-10 16:26:34
news-image

விஜய் அண்டனியின் 'அப்பா குட்டி '...

2026-11-10 15:59:28
news-image

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி...

2026-11-09 16:34:53