இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்துடனான சனாதன வாழ்வியல் முறையுடன் பின்னி பிணைந்துள்ள இதிகாசமான 'ராமாயணம்' எனும் காவியத்தை சர்வதேச அளவில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக படக் குழு பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், அருண் கோவில், ரவி துபே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பங்கஜ் குமார் மற்றும் மகேஷ் லிமாயே ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
ஆன்மீக உணர்வுடன் கூடிய காவிய படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் வழங்குகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் உலக மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து ஏனைய சர்வ தேச அளவிலான ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் அமைந்திருப்பதால் இதற்கான வரவேற்பு உலக நாடுகளில் அதிகரித்து வருகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM