பேருந்து நிலையம் அமைப்பதில் சர்ச்சை; வாழைச்சேனையில் இன முறுகல் நிலை

Published By: Devika

27 Oct, 2017 | 09:35 PM
image

வாழைச்சேனையில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கு சேதம் விளைவிக்க முயன்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்தார்.

வாழைச்சேனை சந்தியில்  பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது. இதற்கான நிதியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஒதுக்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்று (27) காலை ஓட்டமாவடியைச் சேர்ந்த சில முச்சக்கர வண்டி சாரதிகள் பேருந்து நிலையப் பகுதியை மூடியதுடன் முச்சக்கர வண்டிகளையும் நிறுத்தினர்.

இது பற்றி மக்கள் முச்சக்கர வண்டி சாரதிகளிடம் வினவியபோது இருதரப்பினரிடையேயும் கடுமையான வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையான முறையில் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்றுகூடி முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் அவர்கள் அங்கிருந்து அகற்றப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அப்பகுதியில் இன முறுகல் நிலை ஏற்பட்டதனால் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் வாழைச்சேனை பொலிஸாரும் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிற பகுதிகளுக்கான பேருந்துப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதுடன், கடும் பதற்ற நிலையும் ஏற்பட்டது.

அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர, வாழைச்சேனை பொறுப்பதிகாரி ஆகியோர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டதனால் குறித்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் எந்தவித செயற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டாம் எனவும், அவ்வாறு செயற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மறுதினம் திங்கட்கிழமை இந்தப் பிரச்சினையை நீதிமன்றம் மூலமாகத்  தீர்வு காணப்படும் எனவும் அதன் பிறகு அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்தார்.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் நடைபெற்றுவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44