ட்ரோன்ஸ் - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஜி. எம். மோர்கன் பிலிம்ஸ்
நடிகர்கள் : சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேசி, 'சினிமாவாலா' சதீஷ், ஆர். ஜே. தீபக் மற்றும் பலர்.
இயக்குநர் : ராகவ் ஆர். மிர்தாத்
மதிப்பீடு : 2.5/5
போதுமான பொருட்செலவில் ஃபேண்டஸி வித் ஹாரர் கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் 'ட்ரோன்ஸ்' திரைப்படம் - அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தனியார் கல்லூரி ஒன்றில் உயர்கல்வி கற்கும் கிஷோர் ( டிராவிட் செல்வம்)- ராஷ்மிகா( அஞ்சலி நாயர்) - டஷ் ( ஆர் ஜே தீபக்) எனும் மூன்று மாணவ மாணவிகளும் விடுதியில் தங்கி பயிலும் போது, இரவு நேரத்தில் விடுதியில் இருந்து வெளியேறி உற்சாகப்படுத்திக் கொள்ளும் போது காவல்துறையிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.
இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பத்து நாட்கள் கல்லூரியில் இருந்து இடைநிறுத்தம் செய்கிறது. இதனால் தவிக்கும் மாணவ மாணவிகளை கல்லூரியில் பயின்ற இளைஞன் ஒருவன் .. பத்து நாட்களுக்கு நீங்கள் 'பிளாக் ஹோல்' எனும் வீட்டில் தங்கலாம் என்றும், அங்கேயே உண்டு உறங்கலாம் என்றும் சொல்ல ... வேறு வழி தெரியாத மூவரும் பிளாக் ஹோல் வீட்டில் தங்க ஒப்புக்கொள்கிறார்கள்.
அந்த வீட்டில் பிளாக் ஹோல் பத்மநாபன் ( குரைசி) எனும் விஞ்ஞானி மனித உணர்வுகளுக்கு எதிர்வினை ஆற்றும் ரோபோ பெண்ணை வடிவமைத்து அதனை பரிசோதித்து வருகிறார். அங்கு மினியேச்சர் ஆர்டிஸ்ட்டான பிரகிருதி( சித்தி இத்னானி) யை ட்ரோன் மூலமாக கண்டவுடன் காதலிக்க தொடங்குகிறார் கிஷோர். ஆனால் கிஷோரை அவருடன் தோழியாக இருக்கும் கருப்பட்டி@ ராஷ்மிகா ஒரு தலையாக காதலிக்கிறார்.
இந்தக் காதல் கிஷோருக்கு தெரிய வந்த பிறகும், கிஷோர் பிரகிருதியை காதலிக்கிறார். பிரகிருதி, 'காதலை சொல்லும்போது ஒரு பொம்மையையும், மோதிரத்தையும் வழங்கிவிட்டு சொல்' என்கிறார். மோதிரத்திற்கு என்ன செய்வது? என கிஷோர் தவிக்கும் போது, கருப்பட்டி தன் கையில் உள்ள மோதிரத்தை கழட்டி பிரகிருதிக்கு அணிவிக்குமாறு தெரிவிக்கிறார்.
அந்த தருணத்தில் கூட பிரக்ருதி, 'நான் அழகாக இளமையுடன் இருப்பதால்தான் காதலிக்கிறாயா...? அல்லது நான் முதுமையான தோற்றத்தில் அவலட்சணத்துடன் இருந்தாலும் காதலிப்பாயா..?'' எனக் கேட்க.. ''மற்ற ஆண்களைப் போல் நான் இல்லை. நான் உன் மனதை மட்டுமே காதலிக்கிறேன். நீ எப்படி இருந்தாலும் உன்னை ஆயுள் முழுவதும் ஆசை தீர காதலிப்பேன்'' என உத்திரவாதம் அளித்துவிட்டு, பிரகிருதி கையில் மோதிரத்தை அணிவிக்கிறார் கிஷோர். மோதிரத்தை அணிவித்த அடுத்த நொடியில் பிரக்ருதி விட்ச் எனும் சூனியக்காரியாக மாறிவிடுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் கிஷோர் நான் இந்த தோற்றத்தை காதலிக்கவில்லை என சொல்ல, அந்த சூனியக்காரி கிஷோரை ஓரிடத்தில் அடைத்து வைக்கிறார். அவரைத் தேடி கருப்பட்டியும், டஷும் பயணிக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து கிஷோரை சூனியக்காரியிடமிருந்து மீட்டார்களா? இல்லையா? என்பதையும்.. பிரக்ருதியும் விஞ்ஞானி உருவாக்கிய ரோபோவும் ஒரே முக ஜாடையில் இருப்பதால் ஏற்பட்ட குழப்பங்கள் என்ன? என்பதையும்... பிளாக் ஹோல் குறித்த மர்மம் குறித்தும், இதனிடையே மனிதர்களில் அன்பு செலுத்துவதற்கு நிற பாகுபாடு அவசியமா? என்பதை குறித்தும் சொல்லி, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
முதல் பாதியில் கதை எதை நோக்கிப் பயணிக்கிறது என்ற இலக்கே இல்லாமல் நகர்ந்து பார்வையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது.
ஆனால் இரண்டாம் பாதியில் வானியல் இயற்பியல் விதிகள், மனிதர்களுக்குள் உள்ள நிற பாகுபாடு, தேவதைகள் மற்றும் சூனியக்காரியின் பாரம்பரியமான கற்பித நிற தோற்றம்- என புதிய விசயங்களை சொல்லி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஆனால் இதற்காக பார்வையாளர்களை முன் பாதியில் உளவியல் ரீதியாக தயார்படுத்தாதது தான் படக் குழுவினரின் பெரிய குறை.
தான் நேசித்த காதலன்- தன்னை நிறத்தின் அடிப்படையில் புறக்கணித்து விட்ட வலியை- ராஷ்மிகா கதாபாத்திரம் கண்ணாடியில் பார்த்து தன்னைத்தானே அறைந்து கொள்ளும் காட்சி தனித்துவமான கவனத்தை ஈர்க்கிறது. இந்த கதாபாத்திரம் உச்சகட்ட காட்சியில் சூனியக்காரியை அன்புடன் அரவணைத்து ஆறுதல் சொல்லும் காட்சியும் கவனத்தை ஈர்க்கிறது. இதில் நடித்திருக்கும் 'சுருள் கூந்தல் அழகி' அஞ்சலி நாயர் தன் தோற்றத்தை டஸ்கியாக மாற்றிக் கொண்டு திரையில் அதகளம் செய்து ரசிகர்களை வசீகரிக்கிறார்.
கிஷோர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டிராவிட் செல்வம் கதையின் நாயகனாக உயர்ந்து இருந்தாலும்.. அதற்குரிய திரை பங்களிப்பை குறிப்பாக நடிப்பை வழங்க தடுமாறுகிறார்.
பிரக்ருதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானி இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார். சூனியக்காரி வேடத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்கிறார்.
டஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர் ஜே தீபக் பார்வையாளர்களை சிரிக்க வைக்க கடும் முயற்சி மேற்கொள்கிறார் ஆனால் ஓரிடத்தில் கூட அவருக்கு வெற்றி கிட்ட வில்லை பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்.
இன்ஸ்பெக்டர் மாதவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சினிமாவாலா சதீஷ்- ஷெர்லாக் ஹோம்ஸ் கேரட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசி செல்வராஜ்- திரையில் தோன்றுகிறார்களே தவிர.. கதையை நகர்த்த சிறிய நகத்தைக் கூட கிள்ளி போடவில்லை. இதில் இன்ஸ்பெக்டர் மாதவனுக்கு கைரேகை ஜோதிடர் ஒருவர் சொல்லும் திருமணம் சார்ந்த காதல் குறி சோதிடம் எல்லாம், படத்தில் இறுதி அரை மணி நேர காட்சி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.
அதில் இயக்குநரின் வசனங்கள், மனிதர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டுகிறது. அத்துடன்' நான் டெரர் நீ எரர்..' எனும் பாடல் படம் முடிவடைந்த பிறகும் ரசிகர்களின் காதில் ஒலிக்கிறது. இருப்பினும் பின்னணி இசை சுமார் ரகம் தான். ஒளிப்பதிவும், கலை இயக்கமும் நேர்த்தியாக இருக்கிறது.
ட்ரோன்ஸ் எனும் நவீன சாதனத்திற்கு சம்பங்கி என பெயரிட்டிருப்பதும், அதனை ஆண் தேனீயுடன் ஒப்பிட்டிருப்பதும், சினிமாவை தீவிரமாக நேசிக்கும் தீவிர ஆர்வலர்களுக்கு மட்டும் பிடிக்கும்.
ட்ரோன்ஸ் - ஸ்டோன்ஸ்


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM