விழித்திரை பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன பரிசோதனை

Published By: Digital Desk 2

16 Oct, 2026 | 02:17 PM
image

இன்றைய சூழலில் பிறந்து ஆறு மாதமான பச்சிளம் குழந்தைகள் முதல் எண்பது வயது வரையிலான முதியோர்கள் வரை தங்களுடைய இலத்திரனியல் சாதனமான கைபேசியில் தொடர்ந்து டிஜிட்டல் திரையை பார்வையிடும் நேரம் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இதனால் பார்வை திறன் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பார்வை திறனில் ஏற்படும் அதிலும் குறிப்பாக விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்க தற்போது அட்வான்ஸ் ரெட்டினோ ஸ்கிரீனிங் வித்தவுட் ஐ டெலிஷன் எனும் பிரத்யேக பரிசோதனை முறை அறிமுகமாகி இருக்கிறது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய சூழலில் நாற்பதுவயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இவர்கள் தங்களுடைய உடலில் உள்ள ரத்த சக்கரையின் அளவை கண்காணிக்க தொடர் பரிசோதனைகளை மேற்கொள்வதைப் போல் பார்வை திறன் குறித்த பரிசோதனையும் மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஏனெனில் நீரிழிவால் விழித்திரை பாதிக்கப்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது. இதனால் பார்வை இழப்பும் ஏற்பட கூடும் என எச்சரிக்கும் வைத்தியர்கள், தற்போது அறிமுகமாகி இருக்கும் நவீன பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

இத்தகைய பரிசோதனையின் போது ஒளியாலான நவீன கமெரா மூலம் உங்களுடைய கண் -அதன் விழித்திரை- ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது.

மேலும் இத்தகைய தருணங்களில் கண்களில் பிரத்யேக திரவம் எதையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இத்தகைய ஒளி ஊடுருவும் ஸ்கேன் பரிசோதனை மூலம் விழித்திரையில் ஏற்பட்டிருக்கும் வீக்கம் மற்றும் நீர் கோர்வை, ரத்த நாளங்களின் செயல் திறன் ஆகியவை குறித்து துல்லியமாக அவதானிக்க இயலும்.

மேலும் இதன் மூலம் பெறப்படும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் துல்லியமாக அவதானிக்கப்படுவதால் விழித்திரையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை வைத்தியர்கள் அவதானித்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.

இதனால் உங்களுடைய பார்வை திறன் மேம்படும். சிலருக்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலமாகவும், சிலருக்கு சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலமாகவும் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

வைத்தியர் அமர் அகர்வால்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷ்வானோமா எனும் நரம்பில் ஏற்படும் கட்டி...

2026-11-17 13:16:12
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-11-16 15:05:28
news-image

மூக்கடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை-...

2026-11-14 15:45:24
news-image

இரத்த நாள அடைப்பை நீக்கும் நவீன...

2026-11-13 15:26:37
news-image

பிட்யூற்றரி மேக்ரோஅடினோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-11-12 15:10:08
news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47