ராமலீலா விழாவில் கரப்பான்பூச்சி உருவ பொம்மையை எரிக்க தீர்மானம் - பின்னணி என்ன? 

16 Oct, 2026 | 12:00 PM
image

இந்திய நாட்டின் டெல்லியின் பிதாம்பூரில் இந்த ஆண்டு தசரா பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமலீலா வைபவத்தில் இராவணன், கும்பகர்ணன், மேக்னா ஆகிய உருவ பொம்மைகளுடன் கரப்பான்பூச்சி உருவ பொம்மையையும் தீயிட்டு எரிப்பதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். 

சுமார் 30 அடி உயரம் கொண்ட கரப்பான்பூச்சி உருவ பொம்மையை எரிக்கும் தீர்மானம் ஸ்ரீ கேசவ் ராமலீலா சமிதியால் எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விழா ஏற்பாட்டுக் குழு கூறுகையில், “கரப்பான்பூச்சி குப்பையையும் அசுத்தத்தையும் குறிக்கிறது. ஸ்வச் பாரத், ஸ்வச் டெல்லி பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. 

அதேவேளை, விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் பா.ஜ.க எம்.எல்.ஏவுமான அசோக் கோயல், கரப்பான்பூச்சி உருவ பொம்மையை தீயிட்டு எரிக்கும் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். அ

அவர் மேலும் கூறுகையில், 

தீமையின் மீது நன்மையின் வெற்றியை ஊக்குவிப்பதும் தூய்மையின் செய்தியை வலுப்படுத்துவதுமே இந்த பொம்மைகளை எரிப்பதன் நோக்கம். இராவணனின் படையில் உள்ள அசுரர்களின் வரிசையில் கரப்பான்பூச்சியின் உருவபொம்மை ஒன்றும் சேர்க்கப்படும்  என்றும் அவர் கூறியுள்ளார். 

எனினும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இந்தியாவில் பல பகுதிகளில் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்தே விழா ஏற்பாட்டுக் குழுவினர் கரப்பான்பூச்சி உருவ பொம்மையினை எரிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதென்றும் இதன் பின்னணியில் ஒரு அரசியல் பதிலடி இருப்பதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர் சோனியா காந்தியின்...

2026-11-17 15:42:35
news-image

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் இரு வேறு...

2026-11-17 14:39:11
news-image

அமெரிக்க விமானப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத்...

2026-11-17 14:09:18
news-image

பாப்பரசர் லியோவின் கண்ணுக்கு அருகில் பட்ட...

2026-11-17 13:17:54
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று...

2026-11-17 10:34:29
news-image

தென்னாபிரிக்காவில் இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச்...

2026-11-17 09:01:41
news-image

மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய...

2026-11-16 16:37:17
news-image

“மரண அச்சுறுத்தலையும் மீறி டிசம்பரில் நாடு...

2026-11-16 16:04:49
news-image

49 ஆண்டுகால விண்வெளிப் பயணம் :...

2026-11-16 16:21:10
news-image

ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக அவரது மனைவி...

2026-11-16 15:22:08
news-image

இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசர்...

2026-11-16 14:40:40
news-image

தாய்லாந்தின் புக்கெட் தீவில் வர்த்தகக் கட்டடத்...

2026-11-16 12:03:29