அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது, மூன்றாவதாக ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

2014ஆம் ஆண்டு, நிதி சேகரிப்பு நிகழ்வொன்றில் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயன்றபோது, புஷ் தனது பின்புறத்தை கடுமையாக அழுத்தியதாக பிரித்தானிய எழுத்தாளரான கிறிஸ்டினா பேக்கர் லைன் தெரிவித்துள்ளார். மேலும், அத்தருணத்தில் தனது கணவரும் அங்கிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தையடுத்து, புஷ்ஷின் குடும்ப நண்பியான பெண் ஒருவர் தன்னிடம் வந்து, ‘இந்த விடயத்தைப் பெரிதாக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹீதர் லிண்ட் என்ற நடிகையே முதன்முறையாக ஜோர்ஜ் புஷ் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தினார். அதற்காக ஜோர்ஜ் புஷ் மன்னிப்பும் கோரியிருந்தார்.

அடுத்ததாக ஜோர்தானா க்ரோல்நிக் என்ற நடிகையும் ஜோர்ஜ் புஷ் தனது பின்புறத்தை அழுத்தினார் என்று குற்றம் சுமத்தியிருந்தார்.