அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு : 03 சிறுவர்கள் உட்பட 04 பேர் உயிரிழப்பு

16 Oct, 2026 | 10:13 AM
image

அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்களும் ஓர் ஆசிரியரும் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது இளைஞன், ஆயுதம் ஏந்திய உள்ளூர்வாசி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரிகான் மாநிலத்தின் பெண்ட் நகரில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 05, 08 மற்றும் 11 வயதுகளுடைய மூன்று சிறுவர்களும், 54 வயதுடைய ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதேவேளை, காயமடைந்த 07 வயது சிறுவனும் மற்றுமொரு ஆசிரியரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, பூட்டப்பட்டிருந்த கதவுகளைச் சுட்டு உடைத்து உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, அவரைப் பின்தொடர்ந்து சென்று ஆயுதம் ஏந்திய உள்ளூர்வாசி ஒருவர் துப்பாக்கிதாரியைச் சுட்டுக் கொன்றதாகவும், இதன் மூலம் மேலும் பலர் உயிர் தப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, சந்தேகநபர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சுமார் 400 முதல் 450 மாணவர்கள் கல்வி பயிலும் இந்தப் பாடசாலையில் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, மாணவர்கள் பேருந்துகள் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளிலும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வகுப்புகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் துப்பாக்கிகள் எளிதில் கிடைப்பது மற்றும் தொடர்ச்சியாக இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 360க்கும் மேற்பட்ட வெகுஜனத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர் சோனியா காந்தியின்...

2026-11-17 15:42:35
news-image

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் இரு வேறு...

2026-11-17 14:39:11
news-image

அமெரிக்க விமானப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத்...

2026-11-17 14:09:18
news-image

பாப்பரசர் லியோவின் கண்ணுக்கு அருகில் பட்ட...

2026-11-17 13:17:54
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று...

2026-11-17 10:34:29
news-image

தென்னாபிரிக்காவில் இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச்...

2026-11-17 09:01:41
news-image

மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய...

2026-11-16 16:37:17
news-image

“மரண அச்சுறுத்தலையும் மீறி டிசம்பரில் நாடு...

2026-11-16 16:04:49
news-image

49 ஆண்டுகால விண்வெளிப் பயணம் :...

2026-11-16 16:21:10
news-image

ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக அவரது மனைவி...

2026-11-16 15:22:08
news-image

இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசர்...

2026-11-16 14:40:40
news-image

தாய்லாந்தின் புக்கெட் தீவில் வர்த்தகக் கட்டடத்...

2026-11-16 12:03:29