சிறுவன் ஒருவனின் விளையாட்டுப் புத்தி அவனுக்கே வினையான சம்பவம் சைப்ரஸில் இடம்பெற்றுள்ளது.

பதினொரு வயது நிறைந்த இச்சிறுவன், காந்தப் பந்துகள் இரண்டை மூக்கின் துளைகளில் வைத்துப் பரிசோதித்திருக்கிறான். அவை இரண்டும் பக்கவாட்டில் ஈர்க்கும் என்று அச்சிறுவன் எதிர்பார்த்திருந்தான்.

ஆனால், அவன் சற்றும் எதிர்பாராமல், ஈர்ப்பு சக்தி ஒரு துளை வழியாக மற்றொரு காந்தத்தை ஈர்த்ததால், இரண்டு காந்தப் பந்துகளும் மூக்கின் உட்பகுதியில் சென்று ஒட்டிக்கொண்டன.

இதனால் அவனது மூக்கின் நடுத்தண்டு பாதிக்கப்பட்டதுடன் இரத்தமும் வடியத் தொடங்கியது.

உடனடியாக அச்சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கே, மருத்துவர் பெரிய காந்தங்கள் இரண்டை ஒரே நேரத்தில் மூக்கின் இரு துளைகளிலும் காட்டவே, இரண்டு காந்தப் பந்துகளும் உடனடியாக வெளியேறின.

இப்போது அச்சிறுவனின் மூக்கு முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டுள்ளது.