இந்தோனேஷியாவில் அகதி வாழ்க்கை நாடு திரும்ப தாயும் மகளும் கோரிக்கை; அடுத்த மாதத்திலிருந்து பட்டினி நிலையெனவும் தெரிவிப்பு

Published By: Vishnu

16 Oct, 2026 | 02:07 AM
image

(ஆர்.ராம்)

இந்தோனேஷியாவில் 12வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வரும் கீதா பாணு பிரணவன் என்ற தாயொருவரும் அவரது மகளான அஞ்சனா பிரணவனும் இலங்கை திரும்புவதற்கு உதவியளிக்குமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே தனது கணவர் போதுமான மருத்துவ வசதிகளின்றி உயிரிழந்துள்ள நிலையில் தற்போது தாங்கள் உணவு, மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்காக வழங்கப்பட்ட பணத்தை நிறுத்துவதாக தொண்டு அமைப்பு அறிவித்துள்ளமையால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாம் நாடு திரும்புவதற்கு உதவியளிக்குமாறு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது தமது நெருக்கடியான நிலைமைகளை வெளிப்படுத்தினார்கள்.

அவர்கள் தெரிவித்தவை வருமாறு,

எனது பெயர் கீதாபானு பிரணவன். எனது மகள் அஞ்சனா பிரணவன். நாம் இந்தோனேசியாவில் 2014ஆம் ஆண்டிலிருந்து  ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தில் பதிவு செய்து இங்கு அகதிகளாகவே இதுவரையில் இருக்கின்றோம். என் கணவர் பிரணவன்  2022ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு போதுமான மருத்துவ உதவிகள் கிடைக்காமையினால் உயிரிழந்தார்.

அதன்பின் நானும் மகளும் தனியாக இருந்தநிலையில் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் எம்மை இந்தோனேஷியாவில் செயற்படும் 'ஜயாசன் சித்த வடாத் சுவாதய' என்ற அரச சார்பற்ற அமைப்பிடம் ஒப்படைத்தார்கள்.  பின்னர் நாம் வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவோம் என்று கூறப்பட்டபோதும் ஏமாற்றமே எஞ்சியது.

இந்தாண்டின் ஜுலை மாதத்தில் நாம் தங்கியிருந்த அறை வாடகை செலுத்துவதற்கான கொடுப்பனவையும் குறித்த அமைப்பு நிறுத்திவிட்டது. அதன்பின்னர் எமது உணவுக்காக வழங்கிய பணத்தை தற்போது மிகவும் குறைத்து வழங்குகின்றார்கள். இந்நிலையில் தற்போது உணவுக்கான பணத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளார்கள்.

நாம் எமது நாட்டுக்கு திரும்பிச் செல்கிறோம் எங்களை இலங்கைக்கே அனுப்பி விடுங்கள் என்று ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்துக்கு பல முறை மின்னஞ்சல் அனுப்பினாலும்  அதற்கு பதிலளிக்கமறுக்கிறார்கள்.

இந்தோனேஷியாவில் வேலை செய்வதற்கு எமக்கு அனுமதி இல்லை. ஒரு தனித்தாயாக என்னால் மகளுடன் இங்கே எப்படி வசிப்பது என்று தெரியவில்லை.

எனது பெற்றோர் மற்றும் என் கணவரின் பெற்றோரும் இப்போது உயிருடன் இல்லை. உறவினர்களும் யாரும் என்னுடன் சரியாகப் பேசுவதில்லை. (ஒருவேளை பணம் கேட்பேன் என்றோ தெரியவில்லை). நானும் மகளும் அடுத்த மாதத்திலிருந்து பட்டினி நிலைக்கே செல்வோம். தயவு செய்து அவசரமாக எமக்கு இலங்கை திரும்பிச் செல்வதற்கு உதவி செய்யுங்கள் என்று கண்ணீருடன் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக்...

2026-11-08 12:41:38
news-image

திருகோணமலை கப்பல்துறை துப்பாக்கிச் சூடு மற்றும்...

2026-11-08 16:21:29
news-image

தெனியாய ஆற்றில் மூழ்கி காணாமல்போன நால்வரில்...

2026-11-08 16:11:53
news-image

பயங்கரவாத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சட்டமூலங்கள்:...

2026-11-08 15:07:06
news-image

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்...

2026-11-08 14:59:26
news-image

கொழும்பின் வடிகால் கட்டமைப்புகளால் 30 முதல் ...

2026-11-08 14:44:15
news-image

இலங்கையின் முதலீட்டு நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது -...

2026-11-08 14:25:58
news-image

கொழும்பு வெள்ளம் மாநகர சபையின் பொறுப்பற்ற...

2026-11-08 13:56:56
news-image

தேர்தல் முறைமை தெரிவுக்குழுவை புறக்கணித்த வடக்கு ...

2026-11-08 13:29:02
news-image

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு...

2026-11-08 13:25:06
news-image

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்திற்கு சர்வதேச...

2026-11-08 13:21:47
news-image

உலக வர்த்தகத்தின் இதயத்துடிப்பு இந்தியப் பெருங்கடல்...

2026-11-08 13:18:47