மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசியலமைப்பு வரைவு பணிகள் ஆரம்பம் – நிஹால் அபேசிங்க

Published By: Vishnu

16 Oct, 2026 | 01:44 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னரே புதிய அரசியலமைப்பு வரைவு செயல்முறையைத் தொடங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. கடந்த  அரசாங்கத்தால் பொதுமக்களின் ஆலோசனைகள் மூலம் தொடங்கப்பட்ட வரைவு செயல்முறையை 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நியாயமான காலக்கெடுவிற்குள் புதிய அரசியல் அமைப்பை நிறைவு செய்ய முடியும் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய அரசியல் அமைப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகிய இரண்டும் எங்களால் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் இன்னும் நிறைவேற்றப்படாதவையாகும். ஏனைய வாக்குறுதிகள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, புதிய அரசியல் அமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜனவரி தொடக்கத்தில் ஆரம்பமாகும். பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும்,மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், தாமதமடைந்துள்ள தேர்தல்களை நடத்துவதற்கும் முன்னுரிமை அளித்த பின்னரே புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 2025 ஏப்ரலில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையிலேயே இக்கருத்துகள் வெளியாகியுள்ளன.

மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னரே அரசியலமைப்பு வரைவு செயல்முறையைத் தொடங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. மேலும், கடந்த  அரசாங்கத்தால் பொதுமக்களின் ஆலோசனைகள் மூலம் தொடங்கப்பட்ட வரைவு செயல்முறையைத் தொடர நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும்,நியாயமான காலக்கெடுவிற்குள் புதிய அரசியல் அமைப்பை நிறைவு செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய சட்டமூலத்திற்கு எதிராகப் போராட மக்களுக்கு...

2026-11-08 12:49:05
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக்...

2026-11-08 12:41:38
news-image

திருகோணமலை கப்பல்துறை துப்பாக்கிச் சூடு மற்றும்...

2026-11-08 16:21:29
news-image

தெனியாய ஆற்றில் மூழ்கி காணாமல்போன நால்வரில்...

2026-11-08 16:11:53
news-image

பயங்கரவாத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சட்டமூலங்கள்:...

2026-11-08 15:07:06
news-image

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்...

2026-11-08 14:59:26
news-image

கொழும்பின் வடிகால் கட்டமைப்புகளால் 30 முதல் ...

2026-11-08 14:44:15
news-image

இலங்கையின் முதலீட்டு நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது -...

2026-11-08 14:25:58
news-image

கொழும்பு வெள்ளம் மாநகர சபையின் பொறுப்பற்ற...

2026-11-08 13:56:56
news-image

தேர்தல் முறைமை தெரிவுக்குழுவை புறக்கணித்த வடக்கு ...

2026-11-08 13:29:02
news-image

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு...

2026-11-08 13:25:06
news-image

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்திற்கு சர்வதேச...

2026-11-08 13:21:47